இரசினி கட்சி அரசியலில் இறங்கினால் என்ன? – இலக்குவனார் திருவள்ளுவன்
இரசினி கட்சி அரசியலில் இறங்கினால் என்ன? சிவாசி (இராவு) கயக்குவாடு(Shivaji Rao Gaekwad) என்னும் இயற்பெயர் கொண்ட நடிகர் இரசினிகாந்து அல்லது இரசினிகாந்தன், 160 திரைப்படங்களுக்கு மேல் நடித்துக் கொண்டிருக்கும் மிகச்சிறந்த நடிகர். திரைத்துறையில் காலடி எடுத்து வைத்ததுமே அரசியல் உலகில் காலடி எடுத்து வைக்க ஆசைப்படும் இன்றைய சூழலில் அவருக்கும் அரசியல் உலகில் அரங்கேற்றம் காண ஆசைவருவதில் வியப்பில்லை. ஆனால், ஒரு புறம் ஆசையும் மறுபுறம் அச்சமுமாக இருதலைக் கொள்ளி எறும்பாக அவர் இருப்பதால் அரசியல் பூச்சாண்டி காட்டுவதுபோல் நடந்துகொள்கிறார். மக்கள்திலகம்…