தமிழர்கள் பிரிந்து செல்ல விரும்புவது ஏன்?- நோபள் விருதாளர் ஒசே இரமோசு ஓர்தா
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான வேட்புமனு பதிவு தொடங்கியது : சித்திரை 14/ஏப்பிரல் 27இல் தேர்தல்
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான வேட்புமனு பதிவு தொடங்கியது : சித்திரை 14/ஏப்பிரல் 27இல் தேர்தல் ஈழத்தமிழ் மக்களின் நீதிக்கும், அரசியல் இறைமைக்கும் போராடிவருகின்ற மக்களாட்சி வடிவமாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் இருக்கின்றது. நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மூன்றாம் தவணைக் காலத்துக்கான வேட்புமனு பதிவு மார்ச்சு 10ஆம் நாளன்று தொடங்கியது. எதிர்வரும் 20ஆம் நாள் நள்ளிரவு வரை வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட இருக்கின்றன. எதிர்வரும் தேர்தல் ஏப்பிரல் 27ஆம் நாள் தேர்தல் புலம்பெயர் நாடுகளில் இடம்பெற இருக்கின்றது. தேர்தல் நடைமுறை விதிகள் , வேட்புமனுக்கள்,பிற விவரங்கள்…
தமிழீழக் கொள்கை எங்கும் தடை செய்யப்படவில்லை : வி.உருத்திரகுமாரன் !
விடுதலைப்புலிகளின் தமிழீழக் கொள்கை எங்கும் தடை செய்யப்படவில்லை : தலைமையர் வி.உருத்திரகுமாரன் ! தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் ஐக்கிய நாடுகளினால் (United Nations) ஒருபோதும் பயங்கரவாத இயக்கமாக குறிப்பிடப்படவில்லை. ஈழத்தமிழ் மக்களின் அரசியற்பெருவிருப்பாக அமைகின்ற தமிழீழத்தைக் கொள்கையாகக் கொண்ட தமிழீழ விடுதலைப் புலிகள், அக்கொள்கைக்காக எங்கும் தடை செய்யப்படவில்லை என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தலைமையர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார். இலங்கை அரசு தனது அரசென்னும் தகுதியின் மூலம் அனைத்துலகப் பரப்பில் தமிழர்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தை நெறிபிறழ்ந்த பயரங்கவாதச் செயலாகப் படம்பிடித்துக் காட்ட முயன்றது…
இலங்கையின் ஆறாம் திருத்தச் சட்டத்திற்கு எதிராக 1,705 சட்டத்தரணிகள் ஐ.நாவில் முறையீடு !
இலங்கையின் ஆறாம் திருத்தச் சட்டத்திற்கு எதிராக 1,705 சட்டத்தரணிகள் ஐ.நாவில் முறையீடு ! நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் புதிய இடைக்கால அரசமைப்புச் சட்ட அறிக்கையில் இடம்பெறும் ‘பிரிக்கப்படாத, பிரிக்கவொண்ணாத ஒரே நாடு’ என்ற சொல்லாட்சியையும், முறையீடு எடுத்துக்காட்டுகிறது. இலங்கையின் ஆறாம் திருத்தச் சட்டத்திற்கு எதிராக, ஆயிரத்து எழுநூற்று ஐந்து (1,705) சட்டத்தரணிகள் ஐ.நாவில் முறையீடு ஒன்றினைச் செய்துள்ளனர். நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் முன்னெடுப்பில் உலகளாவிய முறையில் ஒருங்கிணைந்த 1,705 சட்டத்தரணிகள் தமது முறைப்பாட்டை கடந்த திசம்பர் 8 ஆம் நாளன்று ஐ.நாவில் அளித்துள்ளனர். இது…