தமிழிசை வாழ்கிறதா? வீழ்கிறதா? 1 – இலக்குவனார் திருவள்ளுவன்
தமிழிசை வேண்டும் என அமெரிக்காவிலோ, ஆப்பிரிக்காவிலோ, இங்கிலாந்திலோ ஈராக்கிலோ உகாண்டாவிலோ கேட்கவில்லை. மொழிகளுக்கு எல்லாம் தாயான முத்தமிழ் வழங்கும் நம் நாட்டில்தான் போராட வேண்டியுள்ளது. எந்த ஒரு நாட்டிலாவது அந்த நாட்டு மொழியில்தான் இசை இருக்க வேண்டும் எனப் பன்னூறு ஆண்டுகளாகப் போராடுகிறார்களா? என்றால் அந்த இழிநிலை நம் அருமைத் தமிழ்நாட்டில் மட்டும்தான் உள்ளது. பிற நாடுகளில் சிற்சில காலங்களில் அயல் இசை ஆதிக்கப் போக்கு இருந்திருந்தாலும் தாய் இசையின் உரிமையை மீட்டெடுத்துப் போற்றிவருகிறார்கள். இங்கிலாந்தில்கூட 200 ஆண்டுகள் செருமானிய இசை மேலோங்கிய…