கலைச்சொல் தெளிவோம்! 109. சல வெருளி;110. சாவு வெருளி;111. சிவப்பு வெருளி;112. சூன்று வெருளி
கலைச்சொல் 109. சல வெருளி-Hydrophobia தண் அம் துவர் பல ஊட்டிச் சலம் குடைவார் (பரிபாடல் : 90) சல சல என்று ஓடிச் செல்வதால் நீருக்குச் சலம் எனப் பெயர் வந்ததென்பர் அறிஞர்கள். சலத்தைக்கண்டு ஏற்படும் இயல்பிற்கு மீறிய வெறுப்பு அல்லது பேரச்சம் சல வெருளி-Hydrophobia [சல வெருளி என்பது நாய்க்கடிக்கு உள்ளானவர்களுக்குத் தண்ணீரைக் கண்டால் ஏற்படும் பேரச்சம். இதனைச் சென்னைப் பல்கலைக்கழகப் பேரகராதி சல பய ரோகம் என்று குறிக்கிறது.] கலைச்சொல் 110. சாவு வெருளி -Necro Phobia/Thanato Phobia/ Thantophobia…