112. இரிக்கு வேதத்தை அனைவரும் போற்ற வேண்டும் என்கிறார்களே! -இலக்குவனார் திருவள்ளுவன்
(சனாதனம் – பொய்யும் மெய்யும் 111 தொடர்ச்சி) சனாதனம் – பொய்யும் மெய்யும் 112
82. சனாதனம், வருணாசிரமம் என்பனவெல்லாம் இப்பொழுது எங்கே உள்ளது எனக் கேட்பது சரிதானா? – இலக்குவனார் திருவள்ளுவன்
(சனாதனம் – பொய்யும் மெய்யும் 81 தொடர்ச்சி) சனாதனம் – பொய்யும் மெய்யும் 82 ? 82.சனாதனம், வருணாசிரமம் என்பனவெல்லாம் இப்பொழுது எங்கே உள்ளது என்கிறார்களே! “ஆரியராவது! திராவிடராவது! எப்பொழுதோ எழுதி வைத்த பழைய சரித்திரத்தைப் பேசுவதற்கு இது காலமா? இரு சமூகமும் எவ்வளவோ ஆண்டுகளுக்கு முன் ஒன்றாகக் கலந்து விட்டன. இனப்பிரிவை உயிர்ப்பிக்க முனைவது நாட்டுக்கு நலமன்று என ஒரு சாரார் கூறிக் கொண்டே இருக்கின்றனர். எவ்வளவு விளக்கினாலும் அவர்கள் மரமண்டையில் உண்மை குடி போவதே இல்லை, ஆயினும் அடி மேல் அடி…
நாலடி நல்கும் நன்னெறி :11. நல்லன புரிந்து நற்கதி/நன்மை அடைவோம்! – இலக்குவனார் திருவள்ளுவன்
(நாலடி நல்கும் நன்னெறி :10 வழி வழியே இறந்தோரைத் தொடர்ந்து செல்வதே இயற்கை – தொடர்ச்சி) நாலடி நல்கும் நன்னெறி : 11. நல்லன புரிந்து நற்கதி/நன்மை அடைவோம்! எந்நிலத்து வித்திடினும் காஞ்சிரங்காழ் தெங்காகா(து)எந்நாட் டவரும் சுவர்க்கம் புகுதலால்தன்னால்தான் ஆகும் மறுமை; வடதிசையும்கொன்னாளர் சாலப் பலர். நாலடியார், அறிவுடைமை, 243 சொற்பொருள் : கொன்னாளர் = கரிசாளர் (பாவிகள்) ; காழ் = விதை; எனவே, காஞ்சிரங்காயின் /காஞ்சரங்காயின் விதை எனலாம். காஞ்சரஞ்காய் என்பது பூவரச மரத்தைப்போல் தோற்றமளிக்கும் நச்சுமரத்தின் காய். இதனை எட்டி…
54. இல்லாத ஒன்றை ஒழித்துக் கட்டுவதாகப் பேசுவது கடும் கண்டனத்திற்குரியது.”- பன்னீர் செல்வம்.55. 55. ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ எனச் சொல்லிக் கொடுத்தது சனாதனம் – இரங்கராசு + 56. 56. சனாதனத்தை ஒழிக்க வேண்டுமென்றால், அறநிலையத் துறையைக் கலைத்துவிட வேண்டியது தானே? -இரங்கராசு : மெய்யுரை காண்க – இலக்குவனார் திருவள்ளுவன்
(சனாதனம் – பொய்யும் மெய்யும் 51-53 தொடர்ச்சி) சனாதனம் – பொய்யும் மெய்யும் 54-56 (தொடரும்) இலக்குவனார் திருவள்ளுவன்
51. மசூதிகளுக்கு, தேவாலயங்களுக்குச் செல்வதைப்போல் சனாதனத்த மதிக்க வேண்டும். – மமதா பானர்சி 52. சனாதன மதம் இறைவனால் தோற்றுவிக்கப்பட்டது – மருதாசல அடிகளார் 53. “சனாதனம் என்பது ஒரு பழமையான வாழ்வியல் முறை – இவற்றின் மெய் என்ன? – இலக்குவனார் திருவள்ளுவன்
(சனாதனம் – பொய்யும் மெய்யும் 48-50– தொடர்ச்சி) சனாதனம் – பொய்யும் மெய்யும் 51-53 நச்சுப் பொருளையும் மருந்துப் பொருளையும் வேறுபடுத்தாமல் வேற்றுமையில் ஒற்றுமை காண வேண்டும் என்பது எவ்வளவு தவறோ அதுபோன்றதுதான் அவரது உரையும். சனாதனம் என்றால் என்னவென்று அறிந்து கொள்ளாமல் சனாதனத்தைப்பற்றிய தவறாகக் கூறப்படும் உயர்வு கருத்துகளை நம்பி இவ்வாறு கூறுகிறார். இந்த இடத்தில் தருமம் என்பது செய்கையைக் குறிக்கிறது. செய்யப்படுவதையே சிலர் கடமையாக விளக்குகின்றனர். அறம் என்பதற்கும் இதற்கும் தொடர்பு இல்லை. சனாதன தருமம் என்றதும் தருமம் என்பதைப் பிறர்போல் அறம் என நம்பி இவ்வாறெல்லாம் தெரிவிக்கிறார். நன்கு…
48. சனாதனம் யாருக்கும் எதிரி கிடையாது – அண்ணாமலை 49. திருப்பாணாழ்வார் கோயிலில் நந்தி சிலை விலகியிருப்பதே சனாதனம் – அண்ணாமலை 50. சனாதனம் அனைத்து மதங்களிலும் உள்ளது – தினகரன். -யாவும் பொய்யே – இலக்குவனார் திருவள்ளுவன்
(சனாதனம் – பொய்யும் மெய்யும் 45-47 தொடர்ச்சி) சனாதனம் – பொய்யும் மெய்யும் 48-50 ? “திருப்பாணாழ்வார் கோயிலுக்குச் சென்றால் அங்குள்ள நந்தியின் சிலை சற்று விலகி இருக்கும். ஏன் இப்படி விலகி இருக்கிறது? ஒரு கீழ்ச் சாதியை சேர்ந்த மனிதர் சிவனைப் பார்ப்பதற்காக வந்திருக்கிறார். அவரது சாதியைக் காரணம் காட்டி அவருக்கு அங்கிருந்தவர்கள் அனுமதி மறுத்துள்ளனர். இதைப் பார்த்துக் கொண்டிருந்த சிவனின் நந்தி (காளை), தான் அமர்ந்திருந்த இடத்தில் இருந்து சற்று விலகிச் சென்று உட்கார்ந்து கொண்டு, அந்த மனிதர் சிவனைப் பார்க்க அனுமதித்தது. இதுதான் சனாதன தருமம்” என்று அண்ணாமலை…
42. சனாதனத்தில் உயர்வு தாழ்வு இல்லை ; 43. ஆலயத்தில் நுழையத் தடை இல்லை” 44.சனாதனத்தை யாராலும் அழிக்க முடியாது” : ஆளுநர் இரவி சொல்வன சரிதானா? – இலக்குவனார்திருவள்ளுவன்
(சனாதனம் பொய்யும் மெய்யும் 41 – தொடர்ச்சி) சனாதனம் – பொய்யும் மெய்யும் 42-44 பல நகரங்களிலும் ஊர்களிலும் கோவில் நுழைவுப் போராட்டம் நடந்துள்ளன என்பதை வரலாறு சொல்கிறது. ஆரியத்தின் பாய்ச்சல் – வருணாசிரமத்தின் இரும்புக் கை – சனாதனத்தின் கொடுங்கை நீதித்துறை வரை பாய்ந்துள்ளதற்குப் பல நிகழ்வுகளைச் சொல்லலாம். ஒன்று பார்ப்போம். 1874இல் மூக்க நாடார் என்பவர் மதுரையில் கோயில் ஒன்றில் கிளி மண்டபம்வரை சென்றுவிட்டார். அவர் பிராமணர் அல்லர் என்பதை அறிந்த கோயிற் பணியாளர்கள் அவரைப் பிடித்துக் கொன்றுவிட்டனர். இதனால், நாடார்கள் பணியாட்கள் மீது வழக்கு தொடுத்தனர்….
வாழ்க எங்கள் பெரியாரே! வீழ்க ஆரியப் புரியாரே! – கவிஞர் கலி.பூங்குன்றன்
வாழ்க எங்கள் பெரியாரே! வீழ்க ஆரியப் புரியாரே! ஆடு மாடு ஆடு மாடு ஓட்டி வந்த ஓட்டி வந்த இலம்பாடிக் கூட்டம் ஒன்று இலம்பாடிக் கூட்டம் ஒன்று இந்துத்துவா என்று சொல்லி இந்துத்துவா என்று சொல்லி மேயப்பார்த்தது! ஈரோட்டுக் கையிருப்பு ஈரோட்டுக் கையிருப்பு கனலைக் கண்டதும் கனலைக் கண்டதும் தலைதெறிக்க தலைதெறிக்க ஓட்டம் பிடித்தது. இப்பொழுதோ இப்பொழுதோ குலுக்கி மினுக்கி குலுக்கி மினுக்கி ஆன்மிக மோகினியாக ஆன்மிக மோகினியாக ஆலிங்கனம் ஆலிங்கனம் செய்யத் துடிக்குது – ஆரியம் செய்யத் துடிக்குது! எந்த வேடம் எந்த…
தனித்தமிழ் மாட்சி – மறைமலையடிகள் 2
(தனித்தமிழ் மாட்சி – மறைமலையடிகள் 1. தொடர்ச்சி) தனித்தமிழ் மாட்சி – மறைமலையடிகள் 2 இனித், தமிழ்வளர்ச்சிக்கு மாறான மாறுதல் என்னென்றால், தூய தமிழ்சொற்கள் இருப்பவும் அவற்றை விடுத்து அயன்மொழிச்சொற்களை அதன்கட் கொண்டு வந்து புகுத்தலேயாம். ஓர் உடம்பின் உள்ளும் புறம்பும் உள்ள உறுப்புகள் எல்லாவற்றின் தொகுதியே அவ்வுடம்பாதல்போல, ஒரு மொழியில் உள்ள அதன் எல்லாச் சொற்களின் தொகுதியே அம்மொழியாகும். கூனுங் குறளும் ஊமுஞ் செவிடுஞ் சிதடும் உறுப்பறையுமாய்ச் சில உடம்புகள் இயற்கையிலே பழுதுபட்டிருத்தல் போலவும், அங்ஙனம் பழுதுபட்ட உடம்புகள் அக்குறைபாட்டை…
பாவேந்தரும் பொதுவுடைமையும் 2/4 – முனைவர் நா.இளங்கோ
(பாவேந்தரும் பொதுவுடைமையும் 1/4 தொடர்ச்சி) பாவேந்தரும் பொதுவுடைமையும் 2/4 மானிடத்தின் மகத்துவம் பேசும் கவிஞன், சமத்துவத்தின் தேவையை, உயர்வைப் பேசும் கவிஞன், உழைக்கும் மக்களின் உன்னதத்தைப் பேசும் கவிஞன் என்பதோடு நில்லாமல், புதியதோர் உலகம் செய்வோம்- கெட்ட போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம் பொதுவுடைமைக் கொள்கை திசையெட்டும் சேர்ப்போம் புனிதமோடு அதை எங்கள் உயிரென்று காப்போம் என்று புதிய உலகம் அதுவும் பொதுவுடைமை உலகம் அமைக்க விரும்புகிறார் பாவேந்தர். மேலும் உலகப்பன் பாடலில் ஓடப்பராய் இருக்கும் ஏழையப்பர் உதையப்பராகி விட்டால் ஓர் நொடிக்குள்…
பாவேந்தரும் பொதுவுடைமையும் 1/4 – முனைவர் நா.இளங்கோ
பாவேந்தரும் பொதுவுடைமையும் 1/4 உலகம் உண்ண உண், உடுக்க உடுப்பாய் என்று உலகு தழுவிய பார்வையால் மானிட சமுத்திரம் நானென்று கூவிய புதுவைக் குயில் பாவேந்தர் பாரதிதாசன் இருபதாம் நூற்றாண்டு தந்த பாவலர்களில் தலைசிறந்தவர். பாவேந்தரின் கவிதை வீச்சு தனித்தன்மை வாய்ந்தது. செம்மாந்த மொழிநடையும் செழுமையுடைய சொல்லழகும் பொருளழகும் ஒரு சேர இணைந்து அவரின் பாடல்களுக்குத் தனியழகையும் மெருகையும் ஊட்டவல்லன. தமிழ்க் கவிஞர்களில் மட்டுமில்லாது இந்தியக் கவிஞர்களிலும் கூட வேறு எவரோடும் இணைவைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு அவருடைய கவிதைகள் தமிழ், தமிழர்…
தமிழ் அறியாச் சிவனுக்குத் தமிழ்நாட்டில் என்ன வேலை? – இலக்குவனார் திருவள்ளுவன்
தமிழ் அறியாச் சிவனுக்குத் தமிழ்நாட்டில் என்ன வேலை? நிலவளத்தையும் மக்களின் பொருள் வளத்தையும் சுரண்டிப்பிழைக்கும் சாமியார் ஒருவர், சிவனுக்குத் தமிழ் தெரியாது என்று சொல்லியுள்ளார். தமிழ் தெரியாத மாந்தருக்கே தமிழ்நாட்டில் இடம் இல்லை என்னும்பொழுது தமிழ் தெரியாத அவரின் சிவனுக்கு இங்கு என்ன வேலை? அவருடைய சிவனுக்கே இங்கே இடமில்லாத பொழுது அவரும் தமிழ்நாட்டை விட்டு வெளியேற வேண்டும்! சிவ வழிபாட்டைப் பழமையானதாகச் சிலர் கூறி வந்தாலும் தொல்காப்பியர் காலத்தில் சிவ வழிபாடு இல்லை. “மாயோன் மேய காடுறை உலகமும் சேயோன்…