வடசொல் என்பது ஆரியம் மட்டுமல்ல! – ப.பத்மநாபன்

  தமிழ்மொழிக்கு இலக்கணம் வகுத்த தொல்காப்பியர், தொல்காப்பியத்தின் இரண்டாவது அதிகாரமாகிய சொல்லதிகாரத்தில் சொல்லினது இலக்கணத்தைக் கிளவியாக்கம் தொடங்கி எச்சவியல் ஈறாக ஒன்பது இயல்களில் விரித்துக் கூறுகிறார். இறுதி இயலாகிய எச்சவியலின் முதல் நூற்பாவில் தமிழ்மொழியில் செய்யுள் இயற்றப் பயன்படும் சொல்லைப் பற்றிக் கூறுகிறார்.. சொற்களின் தன்மைக்கேற்ப அவற்றைப் பெயர், வினை, இடை, உரி என நான்காக வகுத்த தொல்காப்பியர் சொற்கள் வழங்கும் இடத்தின் அடிப்படையில் நான்கு வகையாக அவற்றைப் பாகுபடுத்துகிறார். அவை இயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல் எனக் கூறுகிறார். இயற்சொல் திரிசொல் திசைச்சொல்…

ஆரிய நெடுங்கணக்கு தமிழைப் பின்பற்றியது

ஆரிய நெடுங்கணக்கு தமிழைப் பின்பற்றியது ஆரிய மொழிக்குரிய நெடுங்கணக்கு தமிழர் முறையைப் பார்த்துச் செய்யப்பட்டது என்பது ஆராய்ச்சியாளர் துணிவு. தாங்கள் செல்லுமிடங்கட்குத் தக்கபடி புதிய லிபிகள் ஏற்படுத்திக் கொள்ளும் இயல்புடைய ஆரியர் தமிழர் லிபியை ஒட்டிக் “கிரந்தம்’ என்னும் பெயரில் புதியதோர் லிபி வகுத்தனர் – பரிதிமாற் கலைஞர் : தமிழ்மொழி வரலாறு

தமிழ் ஆரியத்துக்கு முற்பட்டது என்பதே உண்மை

தமிழ் ஆரியத்துக்கு முற்பட்டது என்பதே உண்மை   மணிப்பிரவாள நடை முதலியவற்றால் தமிழ் ஆரியத்துக்கு முற்பட்ட தென்பது அங்கைக் கனிபோல் விளங்குகின்றது. தமிழ் ஆரியத்துக்கு முற்பட்டது எனக் கூறுவனயெல்லாம் உண்மை கூற வந்ததன்றி ஆரியத்துக்குக் குறைகூற வந்ததன்று -மாகறல் கார்த்திகேயனார் : மொழிநூல் (1913) ப.230.

இலக்குவனாரின் புதிய பார்வை – இலக்குவனார் திருவள்ளுவன்

இலக்குவனாரின் புதிய பார்வை  இலக்குவனார் திருவள்ளுவன்   தமிழிலக்கிய இலக்கண நூல்களைப் புரிந்து கொள்ளப் பெரும் உதவியாகஇருப்பன உரைகளே ஆகும். இலக்கிய, இலக்கணக் கடலின் கலங்கரை விளக்கங்களாக உரையாசிரியர்கள் திகழ்கின்றனர். உரையாசிரியர் களால் பல மூல நூல்களும் நமக்குக்கிட்டும் வாய்ப்பு அமைந்துள்ளன. நமக்கு வழிகாட்டும் உரையாசிரியர்களுள்இக்காலத்தில் போற்றத் தகுந்தவர்களில் குறிப்பிடத்தக்கவர் பேராசிரியர்முனைவர் சி.இலக்குவனார்.    உரையாசிரியர்கள் இலக்கிய விளக்கம்நமக்குப் பயன்தருகின்றன என்பது ஒரு பக்கம். மறுபுறமோ,  அவர்கள், தம் காலச்சூழலுக்கேற்ற உரை விளக்கம் அளித்தும் தம் விருப்பு வெறுப்புக்கேற்பமூலநூல்களை அணுகியும் பொருந்தா உரைகளும் அளித்துள்ளனர்…

நரேந்திரர்(மோடி) இந்து வெறியர் அல்லர்!

நரேந்திரர்(மோடி) இந்து வெறியர் அல்லர்!   நரேந்திர(மோடி)யையும் அவர் சார்ந்த இராசுட்டிரிய சேவா சங்கம் என்னும் அமைப்பையும் இந்து   வெறி பிடித்தவர் என்றும் இந்து வெறி அமைப்பு என்றும் பலரும் கூறி வருகிறோம். உண்மையில் அவரோ அவர் சார்ந்த அமைப்போ இந்து சமய வளர்ச்சிக்கான குறியீடு அல்ல. இத் துணைக் கண்டத்தில் எவ்வாறு பல்வேறு இன மக்களையும் இந்தியர் என அழைக்கிறார்களோ அதுபோல்தான் பல சமயங்களின் கூட்டே இந்து என்னும் சமயமும். எவ்வாறு, அரசியல் அடிப்படையில் நாம் இந்தியர் எனப்பட்டாலும் வரலாற்று அடிப்படையில் இந்தியர்…

பாரதப் பண்பாடு எது? – வை.தட்சிணாமூர்த்தி

  சென்ற ஆண்டிலிருந்து இந்தியா ஒரே நாடாக இருப்பதற்கு என்று ஏதம் வந்துவிடுமோ என்ற ஐயப்பாடு பெரிய இடங்களில் மிகுந்து விட்டது. பிரிவினைத் தடைச் சட்டம் மற்றும் சில வரையறைகள் அதன் விளைவே, பூவியல் அமைப்பை ஒட்டி இந்தியா ஒரு நாடுதானா இல்லையா என்ற ஆராய்ச்சியில் நெடுநாட்களுக்கு முன்பே மேலைநாட்டு பூவியல் வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டனர். சர். சான் சிடார்ச்சி என்னும் ஆங்கிலேயப் பூவியல் ஆராய்ச்சியாளர் போன்றோர் ‘‘இந்தியா பல நாடுகளின் கூட்டேயன்றி ஒரே நாடு அன்று’’ என்பர் வின்சன்ட் சிமித்சிசோம் போன்றோர் இந்தியா…

திருக்குறள் வட சொற் கலவாத தூய தமிழ் நூலாகும்

செந்தமிழ்ச் செம்மல் பேராசிரியர் சி.இலக்குவனார்   ஒரு மொழியாளர் இன்னொரு மொழியாளருடன் கூட்டுறவு கொள்ளுங்கால் இருசாரார் மொழிகளின் சொற்களும் அயலவர் மொழிகளில் கலப்புறுதல் இயற்கை. அக்கலப்பின் மிகுதியும் குறைவும் அந்தந்த மொழியின் வளத்திற்கு ஏற்ப அமையும், சொல்வளம் குறைந்த மொழி, சொல்வளம் நிறைந்த மொழியிடம் கடன் பெறும்.   இமயம் முதல் குமரி வரை வழங்கி வந்த தமிழோடு முதன்முதல் கூட்டுறவு கொண்டது ஆரியமே. ஆரியத்தின் கலப்பாலேயே தமிழ்மொழி பல்வேறு மொழிகளாகப் பிரிவுபட்டது. பரத கண்டத்தின் வடபகுதி (விந்தியத்திற்கு வடக்கு)யில் ஆரிய மொழிக் கலப்பு…