குறட் கடலிற் சில துளிகள் 38 : நல்லினத்துடன் சேர்ந்து நல்லறிவுடன் திகழ்! – இலக்குவனார் திருவள்ளுவன்
(குறட் கடலிற் சில துளிகள் 37 : சிறுமைப்பண்புகளில் இருந்து விலகி இரு! – தொடர்ச்சி) நல்லினத்துடன் சேர்ந்து நல்லறிவுடன் திகழ்! நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்கு இனத்தியல்ப தாகும் அறிவு. (திருவள்ளுவர், திருக்குறள்,௪௱௫௰௨ – 452) பொழிப்புரை: தான் அடைந்த நிலத்தினது தன்மையால் நீரினது தன்மை வேறுபட்டு அந்நிலத்தின் தன்மையை உடையதாகும். அது போல மக்கட்குத் தாம் அடைந்த கூட்டத்தினது தன்மையைப் பொறுத்து அறிவு உண்டாகும் (பேரா.முனைவர் சி.இலக்குவனார்) பதவுரை: நிலத்து-பூமியினது; இயல்பான்-தன்மையால்; நீர்-நீர்; திரிந்து-வேறுபட்டு; அற்று ஆகும்-அத்தன்மைத்து ஆகும்; மாந்தர்க்கு-மக்களுக்கு; இனத்து-இனத்தினது;…
