(சனாதனம் – பொய்யும் மெய்யும் 76-78 தொடர்ச்சி) “மக்கள் தங்கள் பாவத்துக்குக் கழுவாயாகவோ  (பிராயச்சித்தமாகவோ)  தனக்கு நன்மை வர வேண்டும் என்றோ தெய்வத்துக்குத் தர வேண்டும் என்பதற்கோ, கோயில் தட்டில் காணிக்கை செலுத்துகிறார்கள். அதை ஏற்றுக் கொள்ளும் பிராமணன், மக்களுடைய பாவத்தை வாங்கிக் கொள்கிறான். அவன் செய்யும், பூசை, தெய்வத் தொண்டு ஆகியவற்றின் மூலம், அவன் தானமாக வாங்கிக் கொள்ளும் காணிக்கை, மக்களது பாவத்தைப் போக்க உதவுகிறது. அவர்கள் வாங்கிக் கொள்வதை நிறுத்தி விட்டால், மக்களது பாவ மூட்டையை மக்களே சுமக்க வேண்டும். கோயிலில்…