அரிசுடாடில் விளக்காதவற்றைத் திருவள்ளுவர் விளக்கியுள்ளார் – அறிஞர் சி.யூ.போப்பு
அரிசுடாடில் விளக்காதவற்றைத் திருவள்ளுவர் விளக்கியுள்ளார்
பணிவு, அறம், தீங்கினைப் பொறுத்தல் ஆகிய கிருத்துவப் பண்புகள் அரிசுடாடிலால் விளக்கப்படவில்லை….
தமிழ்நெறியாளரால் இம்மூன்றும் பதியும்படி வலியுறுத்தப்படுகின்றன. இம்மூன்றுமே சிறந்த பாக்களான திருக்குறளின் மையக் கருத்துகளாகும். எனவே, நாம் இத்தமிழ்ப் புலவரைக் கிருத்துவராக அழைக்கலாம்.
-அறிஞர் சி.யூ.போப்பு
வெகு அரிய, பெருமைக்குரிய செய்தி! மேல்நாட்டு அறிஞர் ஒருவர் தங்கள் நாகரிகத்தின் தாயகமான கிரேக்கத்தைச் சேர்ந்த மூதறிஞரை விடத் திருவள்ளுவரை உயர்த்தி வைத்துப் பேசுகிறார் என்றால் அது வள்ளுவருக்கு மட்டுமில்லை வள்ளுவர் தம்மை உலகினுக்கே தந்த தமிழ்நாட்டுக்கும் ஈடில்லாப் பெருமை!