(ஒவ்வொரு வரியில் இன்பத்துப்பால்! (1181-1190) தொடர்ச்சி)

ஒவ்வொரு வரியில் இன்பத்துப்பால்!

(திருவள்ளுவர்திருக்குறள்,) 

காமத்துப்பால்

120. தனிப்படர் மிகுதி – பிரிவால் ஏற்படும் தனிமைத் துன்பம்

  1. விரும்புநர் விருப்பம் விதையில்லாப் பழம். (1191)
  2. காதலர் மீதான காதல் வான் மழை. (1192)
  3. விரும்புநர் பிரிந்தாலும் மீள வருவார் என்னும் செருக்கு வரும்.(1193)
  4. விரும்புநர் விரும்பவில்லையேல் உலக உறவால் பயன் என்? (1194)
  5. காதல் கொண்டவர் காதலிக்காவிட்டால் வேறென் செய்வார்? (1195)
  6. காவடிபோல் இருபுறக் காதலே இன்பம். (1196)
  7. காமன் ஒருபக்கமே நிற்பதால் என் துன்பமும் துயரமும் அறியானோ? (1197)
  8. காதலரின் இன்சொல் பெறாக் கொடுமைபோல் வேறுஇல்லை.(1198)
  9. காதலரது புகழ், இன்பம் செவிக்கு.(1199)
  10. அன்பில்லாதவரிடம் ஆறுதல் பெறுவதினும் கடலைத் தூர்ப்பது எளிது. (1200)

இலக்குவனார் திருவள்ளுவன்

(தாெடரும்)