[ஒவ்வொரு வரியில் இன்பத்துப்பால்! (1281-1290) தொடர்ச்சி]

ஒவ்வொரு வரியில் இன்பத்துப்பால்!
திருவள்ளுவர்
திருக்குறள்
காமத்துப்பால்

130. நெஞ்சொடு புலத்தல்

211. அவர் நெஞ்சோ அவரிடம்! ஆனால், என் நெஞ்சோ என்னிடம் இல்லையே! (1291)

212. அன்பு கொள்ளாதவர் மீது நெஞ்சே ஏன் நீ செல்கிறாய்? (1292)

213. கெட்டார்க்கு நட்டார் இல்லை என, நெஞ்சே அவர் பின் செல்கிறாயா? (1293)

214. நெஞ்சே! ஊடல் முடிக்கும் கூடலை அறியாத உன்னிடம் பேசேன். (1294)

215. அவரைக் காணாவிட்டாலும் அச்சம்; கண்டாலும் பிரிவெண்ணி அச்சம். (1295)

216. தனிமையில் நினைத்தல் நெஞ்சை மேலும் வருத்துகிறது. (1296)

217. மறக்க இயலாமல், மறக்கக்கூடா நாணத்தை மறந்தேன். (1297)

218. அவரை இகழ்தல் இழிவென அவரிடமே நெஞ்சு செல்கிறது. (1298)

219. நெஞ்சமே துணைக்கு வராவிட்டால், யார்தான் துணை வருவார்? (1299)

220. நெஞ்சமே உறவாகாதபோது அயலவர் உறவாகாமை இயல்புதானே! (1300)

– இலக்குவனார் திருவள்ளுவன்

(தாெடரும்)