(அதிகாரம் 043. அறிவு உடைமை தொடர்ச்சி)

attai_kuralarusolurai03

02. பொருள் பால்
05. அரசு இயல்
அதிகாரம் 044.  குற்றம் கடிதல்

எவ்வகைக் குற்றமும், சிற்றளவும்,

 வராதபடி கடிந்து விலக்குதல்

 

  1. செருக்கும், சினமும், சிறுமையும், இல்லார்

     பெருக்கம், பெருமித நீர்த்து.

 

     செருக்கு, சீற்றம், சிறுமைத்தனம்,

       இல்லார் முன்னேற்றம் பெருமையது.

 

  1. இவறுலும், மாண்(பு)இறந்த மானமும், மாணா

     உவகையும், ஏதம் இறைக்கு.

 

     கருமித்தனம், பொய்மானம், இழிமகிழ்வு,

       ஆள்வோர்க்கு ஆகாக் குற்றங்கள்.

 

  1. தினைத்துணைஆம் குற்றம் வரினும், பனைத்துணைஆக்

     கொள்வர், பயன்தெரி வார்.

 

    மிகச்சிறு குற்றத்தையும், பழிக்கு

       நாணுவார், மிகப்பெரிதாய்க் கொள்வார்.

 

  1. குற்றமே, காக்க பொருள்ஆகக்; குற்றமே,

     அற்றம் தரூஉம் பகை.

 

    அழிவுதரும் குற்றம் என்னும்,

       பகைப்பொருள், வராவாறு விலக்கு.

 

  1. வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை, எரிமுன்னர்

      வைத்தூறு போலக், கெடும்.

 

     வரும்முன், குற்றங்களைத் தடுக்காதான்

        வாழ்க்கை, தீமுன் வைக்கோல்போர்.

 

  1. தன்குற்றம் நீக்கிப், பிறர்குற்றம் காண்கிற்பின்,

     என்குற்றம் ஆகும் இறைக்கு?

 

    தன்குற்றம் நீக்கிப், பிறர்குற்றத்தை

       ஆட்சியன் ஆராய்ந்தால் என்குற்றம்?

 

  1. செயல்பால செய்யா(து), இவறியான் செல்வம்,

      உயல்பால(து) இன்றிக், கெடும்.

 

      செய்ய வேண்டுவன செய்யாத

        கருமியின் செல்வம், அழியும்.

 

  1. ’பற்(று)உள்ளம்’ என்னும் இவறன்மை, எற்(று)உள்ளும்,

      எண்ணப் படு(து)ஒன்று அன்று.

 

      ‘கருமித்தனம்’ என்னும் குற்றத்திற்கு, 

        ஒப்பான குற்றம், வேறுஇல்லை.

 

  1. வியவற்க, எஞ்ஞான்றும் தன்னை; நயவற்க

      நன்றி பயவா வினை.

 

     தன்னைத் தானே பாராட்டி

        வியக்காதே; தீயவற்றை விரும்பாதே.

 

  1. காதல காதல், அறியாமை உய்க்கிற்பின்,

     ஏதில, எதிலார் நூல்.

 

    தன்விருப்பம் வெளிவராவாறு அடக்கி

       வாழ்ந்தால், பகைப்பார் தோற்பார்.

-பேராசிரியர் வெ. அரங்கராசன்

ve.arangarasan04(அதிகாரம்  045. பெரியாரைத் துணைக்கோடல்)