(அதிகாரம் 060. ஊக்கம் உடைமை தொடர்ச்சி)

attai_kuralarusolurai
02.  பொருள் பால்
05.  அரசு இயல்
 அதிகாரம் 061.  மடி இன்மை  

                       குடும்பத்தையும், குடியையும்  உயர்த்த

முயல்வார் விடவேண்டிய சோம்பல்

 

  1. குடிஎன்னும் குன்றா விளக்கம், மடிஎன்னும்

      மா(சு)ஊர, மாய்ந்து கெடும்.

      சோம்பல்தூசு படிந்தால், அணையாக்  

        குடும்ப விளக்கும் அணையும்.

 

  1. மடியை, மடியா ஒழுகல், குடியைக்,

      குடியாக வேண்டு பவர்.

 

      குடியை, உயர்ந்த குடியாக்க

        விரும்புவார், சோம்பலை விலக்குக.

 

  1. மடிமடிக் கொண்(டு)ஒழுகும், பேதை பிறந்த

      குடி,மடியும் தன்னினும் முந்து.

 

      சோம்பலை, மடியில் கொண்டான்குடி,

        அவனுக்கு முன்னம் மடியும்.

 

  1. குடிமடிந்து, குற்றம் பெருகும், மடிமடிந்து,

      மாண்ட உஞற்(று)இ லவர்க்கு.

 

      சோம்பலால் முயலாதான் குடியில்,

        குற்றம் படியும்; குடிமடியும்.

 

  1. நெடுநீர், மறவி, மடி,துயில், நான்கும்,

      கெடுநீரார் காமக் கலன்.

 

       காலத்தாழ்வும், மறதியும், சோம்பலும்,

        நீண்ட உறக்கமும், கெடுக்கும்.

 

  1. படிஉடையார் பற்(று)அமைந்தக் கண்ணும், மடிஉடையார்,

      மாண்பயன் எய்தல், அரிது.

 

 ஆள்வார்தம் அன்பு அமைந்தாலும்,

        சோம்புவார், சீர்பயன் அடையார்.

 

  1. இடிபுரிந்து, எள்ளும்சொல் கேட்பர், மடிபுரிந்து,

      மாண்ட உஞற்(று)இ லவர்.

 

      உழைக்காமல், இடிபோல் அழிசெயல்

        செய்யும் சோம்பேறி இகழப்படுவான்.

 

  1. மடிமை, குடிமைக்கண் தங்கின்,தன் ஒன்னார்க்(கு),

      அடிமை புகுத்தி விடும்.

 

 சோம்பல் குடிபுகுந்த குடியும்

        குடும்பமும் பகைவர்க்கு அடிமை.

 

  1. குடிஆண்மை உள்,வந்த குற்றம், ஒருவன்,

      மடிஆண்மை மாற்றக், கெடும்.

 

      குடியின் மேலாண்மையால் வருகுற்றங்கள்,

        சோம்பல் மேலாண்மையால் நீங்கும்.

 

0610., மடிஇலா மன்னவன் எய்தும், படிஅளந்தான்,

      தாஅய(து) எல்லாம் ஒருங்கு.

 

 சோம்பாத ஆட்சியான், திருமால்

        அளந்த உலகுஎலாம், அடைவான்.

 

பேராசிரியர் வெ. அரங்கராசன்

(அதிகாரம் 062. ஆள்வினை உடைமை)