(அதிகாரம் 005. இல்வாழ்க்கை தொடர்ச்சி)

arangarasan_thirukkural_arusolurai_attai

001 அறத்துப் பால்           

002 இல்லற இயல்

அதிகாரம்     006. வாழ்க்கைத் துணை நலம்

 

     கணவர், மனைவியரது நல்பண்புகளும்,

இணைஇலாப் பெண்ணின் பெருமைகளும்.  

 

  1. மனைத்தக்க மாண்(பு)உடையள் ஆகித்,தன் கொண்டான்

   வளத்தக்காள், வாழ்க்கைத் துணை.

 

       மனைஅறத்தாள், கணவற்கு வளம்தரு

       தகுதியள்; நலம்சார் துணை.

 

  1. மனைமாட்சி இல்லாள்கண் இல்ஆயின், வாழ்க்கை,

     எனைமாட்சித்(து) ஆயினும் இல்.

 

       இல்லப்பண்பு இல்லாளிடம் இல்எனின்,

       மற்ற சிறப்புகளால் பயன்இல்.

 

  1. இல்ல(து)என்? இல்லவள் மாண்(பு)ஆனால்; உள்ள(து)என்?

   இல்லவள் மாணாக் கடை.

 

       சிறப்[பு]உள்ள இல்லாளால், இல்ல[து]என்?;

       சிறப்[பு]இல்லா அவளால், உள்ள[து]என்?.    

 

  1. பெண்ணின் பெரும்தக்க யாஉள? கற்(பு)என்னும்,

   திண்மை உண்டாகப் பெறின்.

 

       திண்மைக் கற்பின் பெண்மையைவிடப்,

       பெருமை தகுதியது வே[று]எது?  

 

  1. தெய்வம் தொழாஅள், கொழுநன் தொழு(து)எழுவாள்,

   ”பெய்”எனப், பெய்யும் மழை.

 

       கணவனை மதிப்பவள்  “பெய்”எனப்,

       பெய்யும் பருவமழை போன்றவள்.    

 

56. தன்காத்துத், தன்கொண்டான் பேணித், தகைசான்ற

     சொல்காத்துச், சோர்(வு)இலாள், பெண்.

 

         தன்காத்தலில், கணவனைப் பேணலில்,

   சொல்காத்தலில், சோர்[வு]இலாள், பெண்.

 

  1. சிறைகாக்கும் காப்(பு)எவன் செய்யும்….? மகளிர்,

நிறைகாக்கும் காப்பே தலை.

 

         மகளிர், தாமேதம் கற்பைக்,

   காக்கும் காப்பே, தலையானது.

 

  1. பெற்றால், பெறின்பெறுவர் பெண்டிர், பெரும்சிறப்புப்

    புத்தேளிர் வாழும் உலகு.

 

        துணைநலக் கணவரைப் பெறுமகளிர்,

       தேவர் உலகு போவர்.

 

  1. புகழ்புரிந்த இல்இல்லோர்க்(கு) இல்லை, இகழ்வார்முன்,

   ஏறுபோல் பீடு நடை.

 

         புகழ்செய்யும் இல்லாளை இல்லான்,

   பெருமித நடையும் இல்லான்.

 

  1. மங்கலம் என்ப, மனைமாட்சி; மற்(று)அதன்

     நல்கலம், நல்மக்கள் பேறு.

 

                  மங்கலம், மனைஅழகு; அதனது

                   அணிகலம், நல்மக்கள் பேறு.

 – பேராசிரியர் வெ. அரங்கராசன்

(அதிகாரம் 007. மக்கள் பேறு)