(அதிகாரம்  068. வினை செயல் வகை தொடர்ச்சி)

attai_kuralarusolurai

02. பொருள் பால்
06. அமைச்சு இயல்
அதிகாரம் 069. தூது

தூதரது கல்விஅறிவு, தூதுஇயல்

அறிவு, செயல்உறுதி, சொல்முறை.

 

    681பண்(பு)உடைமை, தூ(து)உரைப்பான் பண்பு.       

       நாட்டுப்பற்றும், உயர்குடிப் பிறப்பும்,

         பண்பும், தூதர் இலக்கணம்.

 

  1. அன்(பு),அறிவு, ஆராய்ந்த சொல்வன்மை, தூ(து)உரைப்பார்க்(கு)       

     இன்றி யமையாத மூன்று.

        அன்பும், அறிவும், சொல்ஆய்வுத்

        திறனும், தூதர்க்கு மிகத்தேவை.

  1. நூலாருள் நூல்வல்லன் ஆகுதல், வேலாருள்

     வென்றி வினைஉரைப்பான் பண்பு.

         தூதுநூல் வல்லாரே, பகைவரிடமும்

        தூதை வெற்றியாய் முடிப்பார்.

 

  1. அறி(வு),உரு, ஆராய்ந்த கல்வி,இம் மூன்றன்

     செறி(வு)உடையான், செல்க வினைக்கு.  

        பொதுஅறிவும், தோற்றமும், ஆராய்ந்த

        கல்வியும் நிறைந்தவன் தூதன்.

 

  1. தொகச்சொல்லித், தூவாத நீக்கி, நகச்சொல்லி,

     நன்றி பயப்ப(து)ஆம், தூது.

         தொகுத்தல், வீண்சொல் தள்ளல்,

        மகிழச்சொலல், நன்றுஆதல் தூதுஉரை.

 

  1. கற்றுக்,கண் அஞ்சான், செலச்சொல்லிக், காலத்தால்

     தக்க(து) அறிவ(து)ஆம், தூது.

         உளவியல் கல்வி, அஞ்சாமை,

        தக்கதுஆய்தல், பதியச்சொல்லல், தூது.

 

  1. கடன்அறிந்து, காலம் கருதி, இடன்அறிந்(து),

     எண்ணி உரைப்பான் தலை.            

         கடமை, காலச்சூழல், தகுஇடம்,

         ஆய்ந்து சொல்வான் தலைத்தூதன்.  

 

  1. தூய்மை, துணைமை, துணி(வு)உடைமை, இம்மூன்றின்

     வாய்மை வழிஉரைப்பான் பண்பு.  

        உளத்தூய்மை, நல்துணை, துணிவு,

        தீமைஇலாத சொல்லல் தகுதிஆம்.

 

  1. விடுமாற்றம் வேந்தர்க்(கு) உரைப்பான், வடுமாற்றம்

     வாய்சோரா வன்க ணவன்.       

        தூதுச்செய்தி மட்டுமே கூறுவான்,

        குற்றஞ்சொல்லான், வலியான், நல்தூதன்.

 

  1. இறுதி பயப்பினும், எஞ்சா(து), இறைவற்(கு)

     உறுதி பயப்ப(து)ஆம், தூது.               

        சாவுஆயினும், முழுதுரைத்து ஆட்சியர்க்கு

        வெற்றி தருவான் தூதன்.

பேராசிரியர் வெ. அரங்கராசன்

(அதிகாரம் 070. மன்னரைச் சேர்ந்து ஒழுகல்)