(அதிகாரம் 094. சூது தொடர்ச்சி)

02. பொருள் பால்
12. துன்ப இயல்
அதிகாரம் 095. மருந்து

 நோய்கள் வரும்முன் காக்கும்,

  வந்தால், நீக்கும் மருத்துவம்.

  1. மிகினும், குறையினும் நோய்செய்யும், நூலோர்

     வளிமுதலா எண்ணிய மூன்று.

உடல்சூடு, குளிர்ச்சி, காற்று,

       நிறையினும், குறையினும் நோயே.

 

  1. ”மருந்(து)”என வேண்டாஆம் யாக்கைக்(கு), அருந்திய(து),

     அற்றது, போற்றி உணின்.

“மருந்து”என, வேண்டாம், உணவு  

     முழுதும் செரித்தபின் உண்டால்.

 

  1. அற்[று]ஆல் அள(வு)அறிந்(து) உண்க; அஃ(து)உடம்பு

     பெற்றான், நெடி(து)உய்க்கும் ஆறு.

நீடுவாழ விரும்புவார், செரித்தலின்

     அளவை அறிந்து உண்க.

 

  1. அற்(று),அ(து) அறிந்து, கடைப்பிடித்து, மா(று)அல்ல,

     துய்க்க, துவரப் பசித்து.

 செரித்ததை அறிந்து, பசித்தபின்

       அவ்வகை உணவையே தொடர்க.

 

  1. மாறுபா(டு) இல்லாத உண்டி, மறுத்(து)உண்ணின்,

     ஊறுபா(டு) இல்லை உயிர்க்கு.

      ஒத்துக்கொள்ளாத உணவை, ஒதுக்கி

       உண்பார்க்கு, எந்நோயும் இல்லை.   

 

  1. இழி(வு)அறிந்(து), உண்பான்கண் இன்பம்போல் நிற்கும்,

     கழிபேர் இரையான்கண் நோய்.

செரித்தபின், உண்பார்க்கு இன்பம்;

       பெரும்தீனியார்க்கு, நோயின் துன்பம்.

 

  1. தீஅள(வு) இன்றித் தெரியான், பெரி(து)உண்ணின்,

   நோய்அள(வு) இன்றிப் படும்.

 செரிப்புத்திறன் தெரியாது, நிரம்ப

       உண்டால், நோய்களும் நிரம்பும்.

 

  1. நோய்நாடி, நோய்முதல் நாடி, அதுதணிக்கும்

     வாய்நாடி, வாய்ப்பச் செயல்.

    நோய்,காரணம், தீர்க்கும்வழி ஆழ

       ஆராய்ந்து, மருத்துவம் மேற்கொள்க.

  1. உற்றான் அளவும், பிணிஅளவும், காலமும்,

     கற்றான் கருதிச் செயல்.  

      நோயர்நிலை, நோய்அளவு, காலம்,

       ஆராய்ந்து மருத்துவம் மேற்கொள்க.

 

  1. உற்றவன், தீர்ப்பான், மருந்(து),உழைச் செல்வான்என்(று),

     அப்பால்நால் கூற்றே மருந்து.

    மருத்துவக் கூறுகள்: நோயர்,

       மருத்துவர், மருந்து, உதவுநர்.

பேரா.வெ.அரங்கராசன்

பேரா.வெ.அரங்கராசன் :ve.arangarasan(அதிகாரம்  096 குடிமை)