பொய்தீர் ஒழுக்கநெறி தந்தாய் வாழி! 6 -10 : தி.வே.விசயலட்சுமி
(பொய்தீர் ஒழுக்கநெறி தந்தாய் வாழி! 1 – 5 தொடர்ச்சி)
பொய்தீர் ஒழுக்கநெறி தந்தாய் வாழி! 6-10
- நயங்கண்ட வள்ளுவர் நன்மணிபோல் நாமும்
வயங்கண்டு கற்போம் விழைந்து.
- குறளே கொடுமை களைந்திடும் கூர்வாள்,
திறனை அறிவோம் தெளிந்து.
- போரற்று வையம் புதுவையம் ஆவதற்கே
சீர்பெற்ற தீங்குறளே சிறப்பு.
- குறள்நெறி பேணின் குறையா வளங்கள்
திறம்படப் பெறுவோம் தேர்ந்து.
- ஒன்றேமுக் காலடிநூல் காட்டும் அறநெறியால்
வெல்வோம் விதிப்பயனை நாம்.
-புலவர் தி.வே.விசயலட்சுமி
Leave a Reply