மக்களாட்சி வெற்றி பெற ஒழுக்கமுடையோர் போற்றப்படுதல் வேண்டும் – சி.இலக்குவனார்
மக்களாட்சி வெற்றி பெற ஒழுக்கமுடையோர்
போற்றப்படுதல் வேண்டும்!
பிறப்பால் உயர்வுதாழ்வு பேசுதல் பேதமை. ஒழுக்கத்தால் உயர்ந்தோரே நல்ல குடியில் பிறந்தோர் ஆவார். ஒழுக்கக் கேடர்களே இழிந்த பிறப்பினர் ஆவார்கள். ஆதலின்
ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம்
இழிந்த பிறப்பாய் விடும்
என்று இடித்துரைத்தார். ஒழுக்கத்தால் உயர்வுபெறும் நெறி வெற்றி பெற்றிருக்குமேல், இன்று நாட்டில் பூசல்கள் தோன்றுமா? ஒழுக்கம் உடையாரை ஒதுக்கிப் புறக்கணிப்பதனால் அன்றோ இன்று எங்கு நோக்கினும் பூசற் களமாகக் காணப்படுகின்றது. மக்களாட்சி வெற்றி பெற வேண்டுமென்றால், ஒழுக்கமுடையோர் உயர்ந்தோராகக் கருதப்பட்டு உயர்வாகப் போற்றப்படுதல் வேண்டும்.
– பேராசிரியர் சி.இலக்குவனார்,
திருவள்ளுவர் – தமிழகத்தின் முதல் புரட்சியாளர்
குறளமுதம் பக்கம் 519
Leave a Reply