வள்ளுவர் மாலை – இலக்குவனார் திருவள்ளுவன்
வள்ளுவர் மாலை – நாட்டியப் பாடல்
தித், தித், தை; தாம் தித், தித், தை;
தித்தக்கு தத்தக்கு தத்த தாம்;
குத்தகிட்டகிண்ண தொங்க தக்குதாம் தொங்க
தங்குகு தங்குகு தங்குகு தித்தாம்
குத்தகிட்டகிண்ண தொங்க தக்குதாம் தொங்க
தாதங்கி தங்கி கிடதக தித்தித் தை
தத் தத் தாம தத்தாம்
திருகிட கிடதக திக்கும்தாரி
அருமறை தந்தவர், உலகப்புலவர்
குறள்நெறி நல்கிய வள்ளுவர் வெல்க!
தீந்தமிழ் வள்ளுவம் வெல்க! வெல்க!
தீந்தமிழ் வள்ளுவம் வெல்க! வெல்க!
தீந்தமிழ் வள்ளுவம் வெல்க! வெல்க!
ஞாலப் புலவனை அறநெறித் தலைவனை
தொங்கிட கிடதக தொக்குந்தரி
என்றென்றும் போற்றிப் புகழ்ந்திடுவோம்!
திக்கிட கிடதக தீக்குந்தாரி – வள்ளுவர் நூலை
கற்றவர் வாழ்வில் உயர்ந்திடுவார்
உக்குடுதாம் உக்குடுதை
என்றென்றும் வாழ்வில் உயர்ந்திடுவார்
தாக்கு திக்கு தாகிட கற்போம் குறள்வழி நிற்போம்
தங்கி கிடதக தித்தித்தை
தீந்தமிழ் வள்ளுவம் வெல்க! வெல்க!
தீந்தமிழ் வள்ளுவம் வெல்க! வெல்க!
(நாட்டியத் தொடக்கத்தில் கணபதி கௌத்துவம் எனப் பாடுகிறார்கள்.
அதற்கு மாற்றாகப் பாடுவதற்கான பாடல்)
– இலக்குவனார் திருவள்ளுவன்
சொற்கட்டு : கலைமாமணி செல்வம்
தமிழர் நாட்டியக்கலையில் ஆரியக் கடவுளைப் போற்றும் இடைச்செருகல் முயற்சியை அழிக்கும் இந்த நன்முயற்சிக்கு நன்றி ஐயா!