வேந்தர் முதலானவருக்கு வள்ளுவர் கூறியன அலுவலகத் தலைவருக்குப் பொருந்துகிறது – பெ.(உ)லோகநாதன்
அன்றைய வேந்தர் முதலானவருக்கு
வள்ளுவர் கூறியன
இன்றைய அலுவலகத் தலைவருக்குப் பொருந்துகிறது.
பொய்யாமொழிப் புலவர் வாழ்ந்த காலம் குழுமங்களில்லா, அரசர்கள் கோலோச்சும் காலமாக இருந்தபடியாலும், அவ்வரசர்களுக்கு அறிவுரைகளைக் கூறிக் கட்டளைகளை நிறைவேற்றும் பொறுப்பில் அமைச்சர்கள் இருந்தமையாலும், அவ்வமைச்சர்கள் பெற்றிருக்க வேண்டிய பண்புகளை ‘அமைச்சு’ என்னும் அதிகாரத்தில் தெளிவாக விளக்கியுள்ளார். அவ்வதிகாரத்தில் கூறப்பட்டுள்ள கருத்துகளை முதன்மைச் செயலர் (Chief Executive) ஒருவர் பெற்றிருக்க வேண்டிய பண்புகள் அல்லது குணநலன்கள் எனக் கொள்வோமேயானால் குழும ஆளுகை (Corporate Governance or Corporate Management) கோலோச்சும் இக்காலக்கட்டத்திற்கும் அவை பொருந்துவதைக் காணலாம்.
அரசர், வேந்தர், சான்றோன் எனப் பலவாறானும் சுட்டப்பட்டு, சொல்லப்பட்டுள்ள கருத்துகள் அத்தனையும் மேலாளர், செயல் அலுவலர் அல்லது தலைவர் என ஒரே நிலையில் வைத்துப் பொருள் கொள்ளப்பட்டுள்ளன. தற்காலத்தில் அரசு / குழுமம் ஆகியவற்றினை இயக்கிடுவோர் அரசருக்கு நிகராக அல்லது ஒரு தலைவர் என எடுத்துக்கொள்வது தவறாகாது.
முனைவர் பெ.(உ)லோகநாதன், வாழும் வள்ளுவம் : பக். 35, 36
Leave a Reply