தலைப்பு-முதலும்பொருளும் : thalaippu_muthalumporulum

என்றும் உள்ளனவற்றை முதற் பொருள் என்றதன் சிறப்பு நோக்கின் வியத்தொறும் வியத்தொறும் வியப்பிறந்தது.

முதல் எனப்படுவது நிலம் பொழுதும் இரண்டின்

                 இயல்பென மொழிப இயல்புணர்ந் தோரே

என்பர் ஆசிரியர். உலகத்திற்கு முதன்மையாக இருப்பன இவையே யன்றோ ! இவை யாரால் எப்பொழுது தோற்றுவிக்கப்பட்டன என்று வரையறுத்துக் கூற முடியாத இயல்பினவாக இருக்கின்றன. இடமும் காலமும் என்றும் உள்ளனவாதல் வேண்டும். ஆகவே என்றும் உள்ளனவற்றை முதற் பொருள் என்றதன் சிறப்பு நோக்கின் வியத்தொறும் வியத்தொறும் வியப்பிறந்தது ஆகின்றது.

பேரா.சி.இலக்குவனார்:

தொல்காப்பிய ஆராய்ச்சி: பக்கம்: 133