மிகவும் பழமை வாய்ந்தது தொல்காப்பியம் – புலவர் செந்துறைமுத்து
மிகவும் பழமை வாய்ந்தது தொல்காப்பியம்
தமிழ் இலக்கிய உலகு உலகு மிகவும் பழமைபட்டது; பரந்து பட்டது; பெருமைபட்டது. தமிழ் இலக்கியங்களைத் தமிழ் உலகு எனவும் தமிழ் கூறும் இலக்கிய உலகு எனவும் கூறலாகும். காலவரையறையைக் காண வியலாத பழமையையும் பெருமையையும் கொண்டது தமிழ் உலகு. தமிழ் உலகில் வழங்கும் நூல்களில் தொல்காப்பியம் மிகவும் பழமை வாய்ந்தது. அந்நூலின் பெயரே அதன் பழமையைக் காட்டுவதாயுள்ளது. தொல்காப்பியத்துக்கு முன் அகத்தியம் இருந்தது என்பர். ஆனால், அந்நூல் முழுமையும் கிடைக்கப் பெறாமையின், கிடைத்துள்ள நூல்களுள் மிகவும் பழமை வாய்ந்ததாயுள்ளது தொல்காப்பியம்.
– புலவர் செந்துறைமுத்து : பரிபாடல் பழக்க வழக்கங்கள் : பக். 14
உண்மை. நன்று.
மதியழகி இலக்குவனார்