அழை-தகவலாற்றுப்படை15 :inivtation - srinivasan durapathiamman

தமிழ் இணையக் கல்விக்கழகம்

வழங்கும்

தகவலாற்றுப்படை

(திட்டத்தின் கீழ்)

தொடர் சொற்பொழிவு-15

“திரௌபதி அம்மன் வழிபாட்டில் சமயம் எனும் அமைப்பு”

என்னும் தலைப்பில்

பேராசிரியர் இரா. சீனிவாசன்

(பேராசிரியர், மாநிலக் கல்லூரி, சென்னை.)

 உரையாற்றுகிறார்.

   ஆனி 31, 2047 / 15.07.2016, வெள்ளிக்கிழமை 

                மாலை 4.00 மணி

  தமிழ் இணையக் கல்விக்கழகம், கலையரங்கம் 

அனைவரும் வருக! 

 பேராசிரியர் இரா. சீனிவாசன் குறித்து 

ஆய்வாளர், பதிப்பாசிரியர், ஆசிரியர், கல்வியாளர், இதழ் ஆசிரியர், நாட்டார் வழக்காற்றியல் மற்றும்  தெருக்கூத்து ஆய்வாளர். களஆய்வுகளில் மிகுந்த ஈடுபாடுள்ளவர். முதுகலை, ஆய்வியல் நிறைஞர், முனைவர் பட்டங்களைச் சென்னைப் பல்கலைக்கழகத்தில் பெற்றார். திருத்தணி அரசு கல்லூரியிலும், தற்போது சென்னை மாநிலக் கல்லூரியிலும் தமிழ்த்துறைப் பேராசிரியராகப் பணியாற்றிவருகிறார். தமிழில் உள்ள நூல்களிலேயே அளவால் பெரியதாகிய    நல்லாப்பிள்ளை பாரத நூலைப் பதிப்பித்தது இவருடைய முதன்மையான பணிகளில் ஒன்று. ‘புதியபனுவல்’ என்ற பன்னாட்டு ஆய்விதழைத் தொடங்கி நடத்திவருகிறார். இந்த இதழ், தமிழ் ஆங்கிலம் ஆகிய இருமொழிகளிலும் கட்டுரைகளைக் கொண்டு வெளிவரும் காலாண்டிதழ் ஆகும். தமிழ்நாட்டில் பாரதம், இராமாயணம் முதலிய இதிகாசக் கதைச் சொற்பொழிவாளர்களுக்குப்  பாராட்டுவிழா எடுத்துள்ளார். செந்தமிழ்ச்சோலை என்ற இலக்கிய அமைப்பு இவருக்குப் ‘பாரதச் சுடர்’ என்ற விருது வழங்கியுள்ளது.

அன்புடன்,
தமிழ் இணையக் கல்விக்கழகம்,

காந்தி மண்டபம் சாலை,

அரசு தகவல் தொகுப்பு விவர மையம் எதிரில்
சென்னை – 600 025.
தொ.பே: 2220 1012 / 13
மின்வரி: tamilvu@yahoo.com

 அரிச்சுவடி முதல் தமிழ் கற்க : www.tamilvu.org