முத்திரை-தமிழ்க்குடில் : muthirai_thamizhkudil

bharathiyar01

ஆர்வமுள்ளவர்கள் அனைவரும் பங்கு பெறுக!

பரிசு வெல்லும் வாய்ப்பினை பெறுக!

அன்புத் தோழமைகளுக்கு,

‘தமிழ்க்குடில்’ பொறுப்பாளர்களின் அன்பு வணக்கம். தாங்கள் அனைவரும் ஆர்வமுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் “மகாகவி பாரதியின் பிறந்தநாளை” முன்னிட்டு “தமிழ்க்குடில் அறக்கட்டளை நடத்தும்” கவிதைப் போட்டியினைத் தங்களிடம் பகிர்வதில் மகிழ்ச்சியடைகிறோம். தோழமைகள் அனைவரும் பெருமளவில் பங்குகொண்டு போட்டியினைச் சிறப்பிக்க வேண்டுகிறோம்.

கவிதைப் போட்டி விதிமுறைகள்:

  1. தலைப்பு : தாங்களே தங்களால் படைக்கப்படும் கவிதைக்குப் பெயரிட்டு அனுப்பலாம்.
  2. கவிதையின் தன்மை: தங்களால் எழுதப்படும் கவிதை எந்தவகையினைச் சார்ந்தது எனக் குறிப்பிடவும். ( எ.கா.) புதுக்கவிதை, மரபுக்கவிதை,
  3. 20 வரிகளுக்குக் குறையாமலும் 50 வரிகளுக்கு மிகாமலும் இருக்கவேண்டும்.
  4. கவிதை வேறு எந்த போட்டிக்கோ, இதழுக்கோ அனுப்பப்பட்டதாகவோ வேறு எங்கும் பதிவிடப்பட்டதாகவோ இல்லாமல், தமிழ்க்குடிலின் இந்தப்போட்டிக்காக மட்டுமே தனித்து எழுதப்பட்டவையாக இருக்கவேண்டும்.
  5. ஒரு கவிஞர் ஒரு கவிதை மட்டுமே அனுப்பவேண்டும்.
  6. உங்களுடைய சொந்தப் படைப்பாக இருக்கவேண்டும்.

 படைப்புகள் tamilkkudil@gmail.com என்ற மின்னஞ்சலில் மட்டுமே அனுப்பிவைக்கப்படவேண்டும்.

 படைப்புகள் வந்து சேரவேண்டிய இறுதி நாள் 25.12.15

குழுமத்திலோ, பொறுப்பாளரின் தனிச்செய்தியிலோ தனித்த மின்னஞ்சலிலோ அனுப்பப்படும் படைப்புகள் போட்டிக்கு ஏற்கப்படமாட்டாது. முடிவுகள் அறிவிக்கப்பட்டபிறகு பதிவுகள் தமிழ்க்குடில் குழுமத்திலும், வலைப்பூவிலும் பகிரப்படும்.

பரிசு விவரம்:

முதல் பரிசு: தமிழ்க்குடில் வழங்கும் நினைவுப்பரிசு- சான்றிதழ்.

இரண்டாவது பரிசு: தமிழ்க்குடில் வழங்கும் நினைவுப்பரிசு – சான்றிதழ்.

மூன்றாவது பரிசு: நூல் – தமிழ்க்குடில் வழங்கும் சான்றிதழ்.

இதைப் போட்டி என்று மட்டுமே எண்ணாமல், நமது தனித்திறமைகளை வெளிக்கொணரும் ஒரு முயற்சியாகவும், பயிற்சியாகவும் கொள்ள வேண்டுகிறோம். நம் தாய்மொழிக்கும், நம்முடைய அடுத்த தலைமுறைக்கும் நாம் ஆற்றும் கடமையில் ஒன்றென்பதை உணர்ந்து அனைவரும் ஆர்வமுடன் கலந்து கொண்டு சிறப்பித்துத் தருமாறு கேட்டுக்கொள்கிறோம். தமிழ்க்குடில் நோக்கம், செயல்பாடுகள் பற்றி அறிய தமிழ்க்குடில் வலைப்பூவை காண வேண்டுகிறோம். நன்றி.

  குறிப்பு: தாங்கள் எழுதுவதோடு மட்டுமல்லாமல், தங்கள் நட்புகளையும் மற்றும் கல்லூரிகளிலும் பகிர்ந்து அதிக அளவில் போட்டியாளர்களை அறிமுகப்படுத்தவேண்டுகிறோம்.

என்றும் உங்களுடன்,

  • தமிழ்க்குடில்
  • தகவல்: இரமாமலர்