“துறைதோறும் கம்பன்” பன்னாட்டுக் கருத்தரங்கம்: மார்ச்சு15-இல் காரைக்குடியில் தொடக்கம்
கம்பன் தமிழ் ஆய்வு மையம் சார்பில் “துறைதோறும் கம்பன்” என்ற தலைப்பில் வரும் மார்ச்சு 15-ஆம் நாள் பன்னாட்டு ஆராய்ச்சிக் கருத்தரங்கம் காரைக்குடியில் தொடங்குகிறது.
கம்பர் திருநாளை முன்னிட்டு காரைக்குடியில் உள்ள கம்பன் தமிழ் மையம் சார்பில் 2 நாள்கள் நடைபெறும் இந்தக் கருத்தரங்கில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தமிழ் அறிஞர்கள், ஆய்வாளர்கள், ஆர்வலர்கள், பேராசிரியர்கள் கலந்துகொள்கிறார்கள்.
“கம்பன் துறைகள்” என்ற பொதுத் தலைப்பில் மூன்று பிரிவுகளில் மார்ச்சு 15,
16 ஆகிய நாள்களில் காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை இந்தக் கருத்தரங்கம் நடைபெறுகிறது.
இந்தக் கருத்தரங்கில் பேராசிரியர்கள், ஆசிரியர்கள், தமிழில் முனைவர் பட்டம் பெற்றவர்கள் மற்றும் பொது ஆராய்ச்சிகளுக்குப் பதிவு செய்துள்ள மாணவர்கள் பேராளர்களாகக் கலந்துகொண்டு தங்களது ஆய்வுக் கட்டுரைகளை அளிக்கலாம்.
பேராளர்களால் அனுப்பப்படும் ஆய்வுக் கட்டுரைகள் அனைத்தும் தொகுக்கப்பட்டு கம்பன்
கருத்தரங்கு குறித்த விரிவான விளக்கங்கள், தலைப்புகள், நெறிமுறைகள், பதிவுப் படிவம் அடங்கிய அறிக்கையினை கம்பன் தமிழ் ஆய்வு மையம், கம்பன் மணி மண்டபம், காரைக்குடி-630001 என்ற முகவரிக்கு எழுதி பெற்றுக்கொள்ளலாம்.
மேலும் kambantamilcentre@gmail.com என்ற மின் அஞ்சலில் தொடர்பு கொண்டு விவரங்களை மின் அஞ்சலிலும் பெறலாம்.
விவரங்களையும், படிவத்தையும் kambantamilcentre.blogspot.in
என்ற மின் வலைப்பூவிலும் பெறலாம்.
கருத்தரங்கு ஒருங்கிணைப்பாளர்களை 9445022137, 9442913985 என்ற அலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
பேராளர்கள் தங்களது கட்டுரைகளைப் பதிவு செய்ய பிப்பிரவரி முதல் நாள் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
Leave a Reply