dog-and-parrot02

    நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே கொளப்பள்ளி ஒலிமடா பகுதியில் கணபதி என்பவர் வசிக்கிறார். இவர் பப்பி  என்னும் நாயையும் ரோசி என்னும் கிளியையும் வளர்த்து வருகிறார்.  நாய் கம்பித்தடுப்பு உடைய  கூண்டுபோன்ற பகுதியில் அடைக்கப்பட்டிருந்தது. ஒரு நாள் பப்பி/நாய் இருந்த  கூண்டிற்கு ரோசி/கிளி சென்றுள்ளது. உடனே பப்பி/நாய் வெறியுடன் ந்த பப்பி, ரோசி/கிளியைக் கடிக்க முயன்றது.  விர்ரென்று பறந்து ரோசி உயிர் தப்பியது. மீண்டும் ஒரு முறை பப்பி கூண்டிற்கு ரோசி சென்றது.  ஆனால்,  இந்தமுறை  அமைதியாக இருந்தது. இதையடுத்து, நாட்கள் செல்ல..செல்ல. ரோசி வருவதும் பப்பி வரவேற்பதுமாக அமைந்து இருவரும் நல்ல நண்பர்களாக மாறினர். ரோசி, பப்பி மீது ஏறி விளையாடுவதும், ரோசியைப் பார்த்து பப்பி  அச்சமுற்று ஓடுவது போல் நடித்து விளையாடுவதுமாகப் பொழுதுபோக்குவதைப் பார்ப்பது அங்குள்ள மக்களுக்குப் பொழுதுபோக்காக மாறிவிட்டது. இப்போது, பப்பி கூண்டுக்குள்ளேயே, ரோசியையும் விட்டு விட வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பதாகக் கணபதி கூறியுள்ளார். பப்பி உட்கொள்ளும்  இறைச்சி உணவுகளையும் ரோசி  சுவைக்கிறது.யாராவது வெளியாட்கள் ரோசியைத் தொட முயன்றால், உர்…உர்… என பப்பி எச்சரிக்கை செய்து ரோசியைப் பாதுகாத்து வருகிறது. பப்பி வெளியில் சென்றாலும், ரோசியைப் பிரிந்து செல்வதில்லை. இவர்கள் இணைபிரியாத நண்பர்களாக மாறிவிட்டனர்.  அப்பகுதி பகுதி மக்கள் இவற்றை  வியப்புடன் பார்த்துச் செல்கின்றனர். பறவை ஆராய்ச்சியாளர்கள் சிலர் வந்து ஆய்வு நடத்தி சென்றனர் எனக் கணபதியின் மகன் கண்ணதாசன் தெரிவித்துள்ளார்.

பப்பியையும் ரோசியையும் பார்த்தாவது மக்கள்  தோழமை உணர்வுடன் பிறருடன் பழகுவார்களா?

dog-and-parrot01நம் வீட்டுப் பிள்ளைகளுக்கே ஆங்கிலத்தில் பெயர் வைக்கும் பொழுது தன் மகனுக்குக் கண்ணதாசன் எனப் பெயரிட்டவர் கிளிக்கும் நாய்க்கும் தமிழ்ப்பெயர் சூட்டாதது ஏனோ?

pappy-rosy01