தலைப்பு-சிவப்பிரகாசம் -thalaippu-nuulai

நூலை ஆராய்ந்து ஏற்க!

 

தொன்மையாம் எனும் எவையும் நன்றாகா; இன்று

தோன்றிய நூல் எனும் எவையும் தீதாகா; துணிந்த

நன்மையினார் நலங்கொள்மணி பொதியும் அதன் களங்கம்

நவையாகாது என உண்மை நயந்திடுவர்; நடுவாம்

தன்மையினார் பழமை அழகு ஆராய்ந்து தரிப்பார்;

தவறு நலம் பொருளின்கண் சார்வு ஆராய்ந்து அறிதல்

இன்மையினார் பலர் புகழில் ஏத்துவர் ஏதிலர் உற்று

இகழ்ந்தனரேல் இகழ்ந்திடுவர் தமக்கு என ஒன்று இலரே

 

-உமாபதி சிவனார், சிவப்பிரகாசம், அவையடக்கப்பாடல்