நோய்பரப்பும் பன்றிகளைப் பிடிக்கும் தேவதானப்பட்டி பேரூராட்சி
தேவதானப்பட்டி பேரூராட்சியில்
நோய்களைப் பரப்பும்
பன்றிகளைப் பிடித்த பேரூராட்சி
தேவதானப்பட்டி அருகே உள்ள சாத்தாகோவில்பட்டி, அட்டணம்பட்டி, புல்லக்காபட்டி பகுதிகளிலும் அல்அமீன் நகர் பகுதியிலும் நோய்களைப் பரப்பக்கூடிய பன்றிகள் உலாவருகின்றன. இதனைக் கட்டுப்படுத்தவேண்டும் எனப் பொதுமக்கள் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பின்னர் காவல்துறையும் பேரூராட்சி நிருவாகமும் பன்றிகளை வளர்ப்பவர்கள் தாமாக முன்வந்து பன்றிகளை அப்புறப்படுத்தவேண்டும் என எச்சரிக்கை விடுத்தன. இருப்பினும் பன்றிகளை வளர்ப்பவர்கள் தொடர்ந்து வளர்த்து வந்தனர். அதன்பின்னர் பன்றிகளை வளர்ப்பவர்களுக்குப் பேரூராட்சி சார்பில் எச்சரிக்கை கொடுக்கப்பட்டது. இருப்பினும் தொடர்ந்து வளர்த்து வந்ததால் பேரூராட்சி நிருவாக அதிகாரி தலைமையில் ஏறத்தாழ 20க்கும் மேற்பட்டவர்கள் வலை, சுருக்குக் கயிறு மூலம் பன்றிகளைப் பிடித்து அப்புறப்படுத்தினார்கள்.
இதன் தொடர்பாக நிருவாக அதிகாரி கூறுகையில், நோய்களைப் பரப்பும் பன்றிகளை வளர்ப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தொடர்ந்து வளர்த்தால் பன்றி தொடர்பான நோய்களை ஒழிக்கும்வரை பேரூராட்சி நிருவாகம் பன்றிகளைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கும் என்றும் கூறினார்.
Leave a Reply