மசுகட்டுத் தமிழ்ச்சங்கத்தின் பூவையர் பூங்கா நிகழ்ச்சி – சுரேசமீ
மசுகட்டுத் தமிழ்ச் சங்கம் மகளிர் மட்டுமே கலந்துகொண்ட ‘பூவையர் பூங்கா’ எனும் ஒரு நாள் நிகழ்ச்சியை மசுகட்டு வாடிக்கபீரிலுள்ள, கிறிசுடல் சூட்டு உறைவகத்தில் சித்திரை 22, 2046 / மே 5, 2015 அன்று நடத்தியது.
இந் நிகழ்ச்சியில், வெள்ளித்திரை- சின்னத்திரை நடிகை நளினி, மகளிர் புற்றுநோய் மருத்துவர் மரு. சுமனா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்!
ஆட்டம், பாட்டம் கொண்டாட்டம் எனக் கூடியிருந்த பெண்கள் மகிழ்ச்சியாகக் கொண்டாடினார்கள் என்றால் மிகையாகாது! அழகிப் போட்டியில் தொடங்கிய நிகழ்ச்சி, சொல் விளையாட்டு, இணைப்பு எனச் சின்னத்திரை பாணியில் பிற நிகழ்ச்சிகள் அமைக்கப் பட்டிருந்தன.
நண்பகல் உணவிற்குப் பின் நடனப்போட்டிகளும், மருத்துவர் சுமனாவோடு, புற்றுநோய்க்கான காரணங்கள், தடுப்பு முறைகள், அறிவுரைகள் குறித்த கலந்துரையாடலும் நடைபெற்றன.
போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்குச் சிறப்பு விருந்தினர்கள் பரிசளிக்க, விழா இனிதே முடிவடைந்தது!
இந்நிகழ்ச்சியை பெண் செயற்குழு உறுப்பினர்களான விசயலட்சுமி, விசாலம், சுசிதா தொகுத்து வழங்கினர்!
Leave a Reply