அபுதாபியில் ஓட்டப் போட்டியில் முதல் இடம் பெற்ற தமிழர் செய்யது அலி
அபுதாபி : அபுதாபியில் ஆக்குடிவேட்டு நிறுவனத்தின் ஓட்டப்போட்டி கடந்த தை 27, 2020 / 10.02.2020 அன்று நடைபெற்றது.
இந்த ஓட்டப்போட்டியில் தமிழகத்தின் நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்த செய்யது அலி என்ற இளைஞர் முதல் இடத்தை பெற்றார்.
இவர் 5 புதுக்கல்(கிலோ) தொலைவுப் போட்டியில் முதல் இடத்தைப் பெற்றார்.
அவருக்கு விளையாட்டுக் குழு அதிகாரி பதக்கம் வழங்கிச் சிறப்பித்தார்.
இந்த ஓட்டப் போட்டியில் 300-க்கும் அதிகமானவர்கள் கலந்து கொண்டனர்.
முதல் இடத்தை பெற்ற செய்யது அலிக்கு பல்வேறு அமைப்புகளின் பொறுப்பாளர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
Leave a Reply