கவிஞர் வித்யாசாகருக்கு ‘அறிஞர்அம்பேத்கர் சுடர் விருது’
கவிஞர் வித்யாசாகருக்கு ‘அறிஞர்அம்பேத்கர் சுடர் விருது’
‘குவைத்து, தாய்மண் கலை இலக்கியப் பேரவை’ கடந்தவாரம் ஞாயிற்றுக் கிழமை மாலை மிகச் சிறப்பாக அறிஞர் அம்பேத்கர் பிறந்தநாளைக் கொண்டாடி மகிழ்ந்தது.
அறிஞர்கள் பலரும், அனைத்துக் குவைத்து தமிழ் மன்றங்களின் தலைவர்களும் நிருவாகிகளும், பொறியாளர்கள் பலருமென ஒருங்கிணைந்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தொண்டர்களோடு தொண்டர்களாகச் சேர்ந்து பிற கட்சிகள் எனும் பாகுபாடின்றி அனைத்துக் கட்சியினரும் ஒன்றுகூடி ஒத்துமையாய் “குவைத்து, தாய்மண் கலை இலக்கியப் பேரவையின்” பேரன்பில் இணைந்து சிறப்பாக இவ்விழாவை ” குவைத்தின் மிர்காப்பு நகரில் கொண்டாடியது.
தாய்த்தமிழகத்தில் வருடந்தோறும் கலைப் பணி மற்றும் சமூகப் பணியாற்றும் சிறந்த ஒரு மனிதநேயரைத் தேர்ந்தெடுத்து ‘விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திரு.தொல்.திருமாவளவன் தனது திருக்கரங்களால் வருடந்தோறும் ‘அறிஞர் அம்பேத்கர் விருது’ வழங்கிச் சிறப்பித்து வருகிறார். அதுபோன்றே குவைத்தில் வாழும் விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் தொண்டர்கள் சேர்ந்து ‘குவைத்து தாய்மண் கலை இலக்கியப் பேரவை’ என்று ஏறத்தாழப் பதினைந்தாண்டு காலமாக நடத்தி. சமூக நல்லிணக்கத்தையும், பல தமிழர் நலஞ்சார்ந்த முன்னேற்பாடுகளையும் எண்ணற்ற தமிழர் நலனிற்கான உதவிகளையும் பல நல்லறத் தொண்டுகளையும் திரு. கமி.அன்பரசு தலைமையில், திரு.அறிவழகன். திரு.மகிழ்நன், திரு.அழகர்சாமி, திரு.பன்னீர்செல்வம் போன்றோர் இணைந்து பங்காற்றி வருகின்றனர்.
அத்தகு, சிறப்பு மிக்கோர் செய்ததொரு ஏற்பாட்டின் கீழ் இவ்வாண்டிற்கான சிறப்பு விருதாக ‘அறிஞர்அம்பேத்கர் சுடர் விருது’ வழங்கிச் சிறந்ததொரு எழுத்தாளரும் கவிஞருமான திரு. வித்யாசாகருக்குப் பெருமை சேர்த்துள்ளார்கள்.
தகவல்: முகில் பதிப்பகம், குவைத்து.
Leave a Reply