பிரித்தானியா தமிழர் பேரவையின் தேர்தல் – 2018 – 2019
பிரித்தானியா தமிழர் பேரவையின்
உள்ளூர் கட்டமைப்புகளுக்கான தேர்தல் – 2018 – 2019.
பிரித்தானியா தமிழர் பேரவையின் 2018 – 2019க்குரிய உள்ளூர் கட்டமைப்புகளுக்கான தேர்தல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.தமிழ் மக்களுக்கான நீதிக்கும் நிலையான தீர்வுக்குமான அடிப்படைவழியை வகுத்து 2006இல் இருந்து பிரித்தானியா தமிழர் பேரவையினர் தமதுஅரசியல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதன் முதன்மைப்பகுதியாகப் பல உள்ளூர் கட்டமைப்புக்களை உருவாக்கி அப்பகுதிகளில் வாழும் தமிழ் மக்களையும் உள்வாங்கி மக்கள்நாயக முறையில் தமிழர்களின் அரசியல் போராட்டத்தினைப் புலம்பெயர்தேசத்தில் முன்னெடுத்து வருகின்றனர். கடந்த காலங்களில் இலங்கை அரசின் தமிழர்களுக்கெதிரான நடவடிக்கைகளில் பலதடுப்பரண்களை உருவாக்கித் திருப்புமுனைகள் ஏற்படுவதற்கு பிரித்தானியா தமிழர் பேரவையின் தொடர்ச்சியான செயற்பாடு முதன்மைக்காரணமாக அமைந்து வருகின்றது.
இதில் குறிப்பிடத்தக்கவை
- கொடூரத் தடுப்பு முகாம்களைத் திறந்து விடு, “Unlock the Concentration Camps in Sri Lanka”
- அவர்கள்உயிரோடு உள்ளனரா?, “Are they Alive?”
- பன்னாட்டுத் தற்சார்பு உசாவல், “International Independent Investigation”
- நிலப் பறிப்பை நிறுத்து, ” Stop the Land Grab”
- ஐரோப்பாவின் வரிச் சலுகை ஏற்றுமதியை நிறுத்து, “Stop GSP+”.
- தண்டனையின்றித் தொடரும் கட்டமைக்கப்பட்ட இன அழிப்பு, “Continuing Genocide with Impunity”
போன்ற விழிப்புணர்வுப் பரப்புரை நடவடிக்கைகள், பல்வேறு அரசியல் தந்திரச் செயல் திட்டங்கள் மூலம் இலங்கை அரசினை உலக நாடுகளின் தொடர்ச்சியான கண்காணிப்புக்குள் கொண்டு வந்தமை, தமிழர்களின் காணிகள் விடுவிக்கப்படுவதற்கான அழுத்தத்தினைத் தமிழர்களுக்கான அனைத்துக்கட்சி பாராளுமன்றக் குழு (APPG T) ஐ.நா போன்றஅமைப்புக்களினூடாக மேற்கொண்டமை மற்றும் தமிழர் பகுதிகளில் புதிதாகக் கட்டமைக்கப்பட்டு வருகின்ற புத்த விகாரைகள்தொடர்பான தகவல்கள் திரட்டப்பட்டு இலங்கை அரசின் தொடர்ச்சியான பண்பாட்டு இனவழிப்பினை ஆவணப்படுத்தி ஐ.நா. வில் வெளியிட்டமை போன்ற பல செயற்பாடுகள் முதலானவை.
உங்கள் பகுதியிலுள்ள உள்ளூர் தமிழர் பேரவைகளின் தேர்தல் தொடர்பான தகவல்கள் கீழ் உள்ள அட்டவணையில் இணைக்கப்பட்டுள்ளன.
பிரித்தானிய தமிழர் பேரவையின் உள்ளூர் கட்டமைப்புகளில் இணைந்து தாயகத்தின் விடிவுக்காக அரசியல் தந்திர வழி முறைகளில் உங்கள் ஆக்கபூர்வமான பங்களிப்பை நல்குமாறு வேண்டிக் கொள்கின்றோம்.
பதிவு அலுவலகம் :
பிரித்தானியத் தமிழர் பேரவை, அலகு 1, ஃபவுண்டேயின் வணிக மையம், அகல் வரிசை, (ountayne Business Centre, Broad lane,) இலண்டன் ( N15 4AG)
பேசி: +44(0)20 8808 0465
தேர்தல் அட்டவணையைத் தளத்தில் காண்க.
வலைத்தளம்: www.britishtamilsforum.org
மின்வரி: info@britishtamilsforum.org
சுட்டுரை: https://twitter.com/tamilsforum
முகநூல்:https://www.facebook.com/BritishTamilsForum
சங்கீத்து(Sangeeth)
பி.த.பே.ஊடக ஒருங்கிணைப்பாளர்(BTF Media Coordinator)
Leave a Reply