மூன்றாவது அனைத்துலகத் திருக்குறள் மாநாடு குறித்த

கலந்துரையாடல் கூட்டம்

கார்த்திகை 11, 20149 / 17.11.2018

மாலை 4.00

இந்தியப் பன்னாட்டு மையம்,

புது தில்லி

(India International centre. Lodhi Road,

New Delhi.)

புது தில்லியில்

புரட்டாசி 06-07, 2049 /   செட்டம்பர் 23 – 24,  2019 நாள்களில்

மூன்றாவது அனைத்துலகத் திருக்குறள் மாநாடு

நடைபெற உள்ளது.

இம்மாநாட்டைச் சீரும் சிறப்புற நிகழ்த்த தில்லி வாழ் ஆர்வலர் 35 பேர் கொண்ட கருத்தரங்கக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அதன் ஏற்பாட்டில் நடைபெறுவதே இக்கலந்துரையாடல்.

தமிழார்வலர் யாவரும் இக்கலந்துரையாடல் கூட்டத்தில் பங்கேற்று, இக்கருத்தரங்க மாநாட்டைச் சிறப்புற நடத்துதற்குரிய நற்கருத்துகளை நல்க வேண்டுகிறோம்.

அனைத்துலகத் திருக்குறள் கருத்தரங்க மாநாட்டு அமைப்பாளர்களான மொரிசியசு நாட்டுப் பேராசிரியர் ஆறுமுகம் பரசுராமன் (முன்னாள் கல்வியமைச்சர் மற்றும் முன்னாள் இயக்குநர், யுனெசுகோ), சென்னை ஆசியவியல் நிறுவனத்தின் இயக்குநர், முனைவர் சான் சாமுவேல் ஆகியோர்  இக்கலந்துரையாடல் கூட்டத்தில் பங்கேற்பர்.

இக்கருத்தரங்க மாநாட்டில் ஆய்வுரை வழங்க விரும்புவோர், பங்கேற்க இசைவோர் மற்றும் இது குறித்து மேலும் விவரம் அறிய விழைவோர் சென்னையில் இயங்கும் இக்கருத்தரங்கச் தலைமைச் செயலகத்தின் கீழ்வரும் முகவரியுடன் தொடர்பு கொள்க:

இயக்குநர்,

ஆசியவியல் நிறுவனம்

சோழிங்கநல்லூர் (அஞ்சல்)

செம்மஞ்சேரி, சென்னை – 600 119

மின்னஞ்சல்:    info@instituteofasianstudies.com

தொலைபேசி:   24500831, 24501851

பேசி:           9840526834

இணையத்தளம்www.instituteofasianstudies.com

ஆசியவியல் நிறுவனம்,

அனைத்துலகத் திருக்குறள் மையம், மொரிசியசு