மொரீசியசு இலக்குவனார் தமிழ்ப்பள்ளியில் குறள்மலைக் குழு

குறள் மலைப் பணிகளின் ஓர் அங்கமாக, மொரீசியசு நாட்டில் இலக்குவனார் தமிழ்ப் பள்ளியில் குறள்மலைக் குழு சென்று கலந்துரையாடல் மேற்கொண்டது.

  இலக்குவனார் படத்தை திறந்து வைத்துப் பிரான்சு சாம் விசய் உரையாற்றினார்.

 மேலும் பேராசிரியர் திருமலை(செட்டி), பேராசிரியர் சொர்ணம்,  தெய்வத்தமிழ் அறக்கட்டளை தலைவர் ஐயா சத்தியவேல்முருகனார், திரு. கந்தசாமி திரு.ஆறுமுகம் ஆகியோர் உடனிருந்தனர்.

  குறள் மலை பணிகளுக்காக மொரீசியசு நாட்டு அதிபர் மேதகு பரமசிவம் வையாபுரி அவர்களை அவர் மாளிகையில் குழுவினர் சந்தித்து உரையாடினர்.

பா.இரவிக்குமார்

9543977077
9380277177

www.thirukkuralmalai.org