சென்னையில் காப்பியக் கருத்தரங்கம்
சென்னையில் காப்பியக் கருத்தரங்கம்
து.கோ.வைணவக் கல்லூரி – தினமணி இணைந்து நடத்தும் தேசியக் கருத்தரங்குக்கு கட்டுரைகள் வரவேற்பு
சென்னை அரும்பாக்கம் து.கோ..வைணவக் கல்லூரியும், தினமணியும் இணைந்து நடத்தவுள்ள தேசியக் கருத்தரங்கத்துக்கான கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன.
வரும் தை 10,2050 / சனவரி மாதம் 24-ஆம் நாள் ‘தமிழ்க் காப்பியங்களில் வாழ்வியல் நோக்கு‘ என்ற தலைப்பில் து.கோ. வைணவக் கல்லூரியும், தினமணியும் இணைந்து தேசியக் கருத்தரங்கம் நடத்தவுள்ளன. பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிப் பேராசிரியர்கள், ஆராய்ச்சி மாணவர்கள், முதுகலை மாணவர்கள், தமிழ் ஆர்வலர்கள் என அனைவரும் இக்கருத்தரங்கில் பங்கு பெறலாம்.
இக்கருத்தரங்கையொட்டி கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன. இக்கட்டுரைகள் அனைத்தும் கீழ் வரும் காப்பிய இலக்கியங்கள் தொடர்பான பொருண்மையில் மட்டுமே இருத்தல் வேண்டும்.
ஆய்வுக் களங்கள்: சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி, உதயணகுமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம், சூளாமணி, நீலகேசி, பெருங்கதை ஆகிய காப்பியங்களில் மட்டும் ஆய்வுக் கட்டுரைகள் அமைதல் வேண்டும்.
கட்டுரையை ஐந்து பக்கங்களுக்கு மிகாமல், ஏ4 தாளில் கணிணியில் சீருரு (Unicode-Latha) எழுத்துருவில் மட்டும் தட்டச்சு செய்து dgvcmutthamizh@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்ப வேண்டும். கட்டுரைகள் அனைத்தும் தொகுக்கப்பட்டு நூலாக்கம் பெற்றுக் கருத்தரங்க நாளன்று வெளியிடப்படும். கட்டுரையைத் திருத்தவோ, சுருக்கவோ பதிப்பாசிரியருக்கு முழு உரிமை உண்டு.
திசம்பர் 25-ஆம் நாளுக்குள் அனுப்ப வேண்டும்: கட்டுரைகள் தமிழிலும், ஆங்கிலத்திலும் அமையலாம். கருத்தரங்க நாளன்று நூல் வெளியிடப்பட உள்ளதால் கட்டுரையை வரும் திசம்பர் மாதம் 25-ஆம் நாளுக்குள் அனுப்பி வைக்க வேண்டும். கட்டுரைகள் ஆய்வுத் தரத்துடன் அமைதல் வேண்டும். கட்டுரையாளர்கள் கருத்தரங்க அமர்வுகளில் பங்கேற்றுக் கட்டுரை வழங்க வேண்டும். கட்டுரையாளர்கள் கருத்தரங்கக் கட்டணமாக உரூ.600-ஐ “The Principal, D.G.Vaishnav College’ என்ற பெயருக்குச் சென்னையில் மாற்றத்தக்க வகையில் வரைவோலை (டிடி) எடுத்து அனுப்பி வைக்க வேண்டும்.
அனுப்ப வேண்டிய முகவரி: மேலும் திசம்பர் மாதம் 25-ஆம் நாளுக்குள் பதிவுப் படிவம், கட்டுரையின் அச்சிடப்பெற்ற கட்டுரை, வங்கி வரைவோலை, கட்டுரையாளரின் ஒளிப்படம் ஆகியனவற்றை முனைவர் ப.முருகன், கருத்தரங்கச் செயலர் – தமிழ்த்துறைத் தலைவர், து.கோ..வைணவக் கல்லூரி (தன்னாட்சி), அரும்பாக்கம், சென்னை -600 106 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
மேலும் தகவல்களுக்கு: பேசி எண்: 94444 10729.
Leave a Reply