ம.இலெ.தங்கப்பா

ம.இலெ.தங்கப்பா

மொழிபெயர்ப்பு அறிஞர் பாவலர் தங்கப்பா மறைவு

[மாசி 25, 1965 / 08.03.1934  – மாசி 17, 2049 / 31.05.2018]

மொழி பெயர்ப்பிலும்  மொழி ஆக்கத்திலும் வல்லவரான தமிழறிஞர் ம.இலெ.தங்கப்பா இன்று (மே 31,2018)வைகறைக்கு முன்னரே –  நேற்று  இரவு 01.30 மணிக்கு – இயற்கை எய்தினார். நலக்குறைவால் சில நாள் முன்னர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர் நேற்று  முதல் நாள் வீடு திரும்பினார்.  ஆனால்,  மூச்சுத் திணறலால்  காலமானார்.

  ‘வானகம்,  எண் 7, 11 ஆவது குறுக்குத் தெரு,  ஒளவை நகர், புதுச்சேரி- 8′  இல் அமைந்துள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்குப் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

கண்தானமும் உடற்கொடையும் அளித்துள்ளமையால் அவரது உடல் இன்றுமாலை 4.00 மணிக்குச்   சமேமஆநி (சவகர்லால் பட்டமேற்படிப்பு மருத்துவக்கல்வி-ஆராய்ச்சி நிறுவனத்திற்கு – JIPMER -) க்கு அளிக்கப்படுகிறது.

[மொழிபெயர்ப்பறிஞர் ம.இலெ.தங்கப்பா – தேவமைந்தன்]