bharathidasan10

 

  புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் இயற்கை எய்தினார்; மறைந்துவிட்டார்! அவருடைய எடுப்பான தோற்றத்தை இனிக் காண முடியாது! செஞ்சொற் கவிதை இன்ப ஊற்று அவரது எழுதுகோலிலிருந்து இனி பீரிட்டெழும்போது; அவர் கால வெள்ளத்தால் அடித்துக் கொண்டு போகப்பட்டார் & என்பதையெல்லாம் எண்ணவே நெஞ்சம் கூசுகிற; சொல்ல நா தழுதழுக்கிறது!

  தமிழகத்தில் இருபதாம் நூற்றாண்டின் ஈடும் எடுப்பும் அற்ற ஒரு பெரும் தமிழ்க் கவிஞரெனத் திகழ்ந்த புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களின் மறைவு பொதுவாகத் தமிழகத்திற்கு குறிப்பாக கவிஞர் கவிஞர் உலகிற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.

‘‘சிற்றூரும் வரப்பெடுத்த வயலும் ஆறு தேக்கிய் நல் வாய்க்காலும் வகைப்படுத்தி நெற்சேர உழுதுழுது பயன் விளைத்த நிறையுழைப்புத் தோள்கள் எவரின் தோள்கள்?’’

எனக்கேட்டு –

‘‘காண்பதெல்லாம் தொழிலாளி செய்தான்; அவன் காணத் தகுந்தது வறுமையாம்? அவன் பூணத்தகுந்தது பொறுமையாம்’’.

என்றெல்லாம் வினவி, தொழிலாளர் நலனுக்காகப் புரட்சிக் குரல் எழுப்பிய புரட்சிக் கவிஞர் மறைந்துவிட்டார்! எனவே தொழிலாளர் நலன் கருதி கொண்டாடப்படும் இவ்வாண்டு ‘மே’ நாள் விழா புரட்சிக் கவிஞரின் நினைவு நாளாக அமைவது சாலப்பொருத்தமடையதாகும்’’.

மே நாள் விழாவோடு புரட்சிக் கவிஞரின் நினைவு நாளையும் இணைத்துக் கொண்டாடுமாறு தமிழகத்தாரைக் கேட்டுக் கொள்கிறேன்.

navalar-nedunchezhiyan01குறள்நெறி: சித்திரை 19. தி.பி.1995 / மே 1, கி.பி.1964