அன்புடையீர்,

 

உத்தமத்தின் (Infitt) 16–ஆவது தமிழிணைய மாநாடும் கருத்தரங்கமும்

கனடாவில் புகழ்மணக்கும் தொராண்டோ பெருநகரில்

ஆவணி 09-11, 2048 / ஆகத்து 25-27, 2017

ஆகிய நாள்களில் நடக்கவிருக்கின்றது.  உலகப் புகழ்பெற்ற ஆய்வாளர்கள் சிறப்பு ஆய்வுரை நிகழ்த்தவிருக்கின்றார்கள்.

 

தமிழ்க்கணிமை சார்ந்த எல்லாத் தலைலப்புகளிலும்  ஆய்வுக்  கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன.

 

கருத்தரங்க முழக்கங்கள்:

ஆழ்தமிழின் அழகும் ஆழக்கற்றல் திறனும்  (Deep Learning)

தமிழில் தரவு அறிவியல் (Data Science)

 

 

நினைவில் கொள்க:

2 பக்க ஆய்வுச்சுருக்கம் அனுப்ப இறுதி  நாள்: சித்திரை 02 / ஏப்பிரல் 15

ஏற்பு முடிவு  அறிவிப்பு : வைகாசி 01 / மே 15

அச்சடிக்க இறுதி வடிவில் 4-6 பக்க

முழுக் கட்டுரை அனுப்ப இறுதி  நாள் : ஆனி 01 / சூன் 15

மாநாடு : : ஆவணி 09,10 & 11, 2048  2017 ஆகத்து  மாதம் 25, 26, 27

 

விரிவான அழைப்பறிக்கை காண  :

தமிழில் ஆங்கிலத்தில்   உரியதைச் சொடுக்குக!

அனைவரும் கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டுகின்றேன்.

அன்புடன்

செல்வா