‘ஒரு சாமானியனின் சாதனை’ நூல்வெளியீட்டு விழா,
‘ஒரு சாமானியனின் சாதனை’ நூல்வெளியீட்டு விழா,
அரவணைப்பு நிதி வழங்கும் விழா
கோயம்புத்தூர் திவ்யோதயா அரங்கில் (கோவை தொடரி நிலையம் எதிரில்) ஆடி11, 2045 / 27. 07. 2014 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு ‘ஒரு சாமானியனின் சாதனை’ நூல்வெளியீட்டு விழாவும் கல்வி பயிலும் மாணவர்களுக்குக் கல்வி உதவித்தொகை வழங்கும் விழாவும் நடைபெற உள்ளன.
இந்த நிகழ்ச்சிக்கு வருகைதரும் அன்பர்களை அரவணைப்புத் தொண்டு நிறுவனத்தின் நிறுவுநர் முனைவர் சி. கொ. இளங்கோவன் அவர்கள் வரவேற்று உரை நிகழ்த்துவார். தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தர் முனைவர் சி.சுப்பிரமணியன் அவர்கள் தலைமையில் இந்த விழா நடைபெறுகின்றது.
திருமதி வனிதா மோகன், திரு. சக்கரவர்த்தி, திருமதி அனுசா, திரைப்பா ஆசிரியர் அறிவுமதி, முனைவர் மு.இளங்கோவன், திரு. பழமலை கிருட்டிணமூர்த்தி, எழுத்தாளர் லேனா தமிழ்வாணன், கே. செகதீசன், திரு. இயகோகா சுப்பிரமணியன், திரு. அப்புகுட்டி, பேரூர் திருமடத்தின் இளையபட்டம் தவத்திரு மருதாசல அடிகளார் ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்க உள்ளனர். திருமதி தேவிகா இளங்கோவன் நன்றியுரையாற்ற உள்ளார்.
தமிழ் ஆர்வலர்கள் பலரும் இந்த நிகழ்சியில் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளனர்.
Leave a Reply