காரைக்குடி கம்பன் கழகத்தின் மார்ச்சு மாதக் கூட்டம்
காரைக்குடி கம்பன் கழகத்தின் மார்ச்சு மாதக் கூட்டம்
காரைக்குடி கம்பன் கழகத்தின் மார்ச்சு மாதக் கூட்டம் எதிர்வரும் மாசி 22, 2047 / 5.3.2016 ஆம் நாளன்று நடைபெற உள்ளது.
இந்நிகழ்வில் கம்பன் கழகப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள் தம் திறமையை வெளிப்படுத்த உள்ளனர். மேலும் இசைப் பட்டிமண்டபம் புதுக்கோட்டை முத்துநிலவன் தலைமையில் நடைபெற உள்ளது. ‘கம்பன் நின்று நிலைப்பது அழகியல் பாடல்களிலே’ என்ற அணியில் மகா. சுந்தர் வாதாடுகிறார். ‘அறவியல் பாடல்களிலே‘ என்று முனைவர் மு.பாலசுப்ரமணியன் வாதாடுகிறார். எப்பக்கம் என்று நடுவர் தீர்ப்புரைப்பார்.
இந்நிகழ்ச்சிக்கு காரைக்குடி முத்துப்பட்டணம் நா. வீர குடும்பத்தாரும் கம்பன் அன்பர் ஒருவரும் கொடை தந்து உதவியுள்ளனர்.
அனைவரும் வருக. எப்போதும் போல் சிற்றுண்டி உண்டு.
Leave a Reply