53kuudangulam_ethiruppu01

கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு

மக்கள் கூட்டமைப்பு “

        கூட்ட அழைப்பிதழ் 

 

நாள்: ஐப்பசி 30, 2045 / நவம்பர் 16, 2014. ஞாயிறு காலை 10 மணி முதல் 4 மணி வரை

இடம்: ரீசென்சி விடுதி அரங்கம், அபிராமி திரையரங்கம் அருகில், ஈரோடு.

தோழமை அமைப்புத் தலைமைத் தோழர்களுக்கு ” கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு ” ஒருங்கிணைப்புக் குழு சார்பில் எமது வணக்கம்.

 

2014 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு கூட்டமைப்பின் கலந்துரையாடல் கூட்டம் நடந்தேறியது. அதன் பிறகு, கூடங்குளத்தில் 3,4 அணு உலைகளை நிறுவக் கூடாது , மக்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்திக் கூட்டமைப்பின் சார்பாகப் புரட்டாசி 10 / செப்டம்பர் 26 ஆம் நாள் பத்திரிக்கையாளர் மன்றத்தில் இதழாளர் சந்திப்பு நடந்தது.

 

ஒருபுறம் சப்பானிடம் அணுத் தொழில்நுட்பம், ஆசுதிரேலியாவிடம் அணு எரிபொருள் என்று அணுமின் உற்பத்தியைப் பெருக்குவதற்கு வரிந்து கட்டிக் கொண்டிருக்கிறது மோடி அரசு. கூடங்குளம் அணுமின் நிலையத்தில் விபத்து, பாகங்கள் பழுது, பல கோடிகளுக்கு டீசல் வாங்கப்பட்டுள்ளது போன்ற செய்திகளுக்கு இடையிலேயே கூடங்குளத்தில் 1000 மெகாவாட்டைத் தாண்டியது மின் உற்பத்தி வணிக முறையிலான உற்பத்தி தொடங்கியது என்றெல்லாம் அரசே பரப்புரை செய்துவருகிறது.

 

மத்திய மாநில அரசுகளின் மக்கள்பகைக் கொள்கைகள் அன்றாடம் அம்பலப்பட்டு வருகின்றன. 3,4 அணு உலைகள் நிறுவுவதற்கு எதிர்ப்பு பெருகியுள்ளது.

 

இந்தப் பின்னணியில் பார்க்கின், முன்பைவிட வாய்ப்பான சூழல் நிலவிக் கொண்டிருக்கிறது. கூடங்குளம் அணு உலைக்குப் பின்னால் இருக்கும் மக்கள்எதிர்ப்பு அரசியலை அம்பலப்படுத்துவதை நாம் தொடர வேண்டும். அடுத்தக்கட்ட வேலைகளை முடிவெடுத்து செயல்படுத்துவதன் பொருட்டு வருகின்ற ஞாயிறு அன்று ஈரோட்டில் கலந்துரையாடல் கூட்டம் நடத்த ஏற்பாடு செய்துள்ளோம். இக்கலந்துரையாடல் கூட்டத்திற்குத் தங்கள் அமைப்பின் சார்பாகத் தாங்களோ வேறு பொறுப்பாளர்களோ வந்து கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

  இப்படிக்கு,

  கொளத்தூர் மணி

  ஒருங்கிணைப்பாளர்              

53kuudangulam_ethiruppu02