ஈரோட்டில் மு.க.தாலினுக்குப் பாராட்டு!  எ.ப.சாமிக்குப் பாடம்! –  இலக்குவனார் திருவள்ளுவன்

ஈரோட்டில் மு.க.தாலினுக்குப் பாராட்டு!  எ.ப.சாமிக்குப் பாடம்! ஈரோட்டுக் கிழக்குச் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் மக்கள் முதல்வர் மு.க.தாலினுக்குப் பிறந்த நாள் பரிசாகப் பாராட்டி அளித்ததே கோவனின் வெற்றி. ஒருவேளை குறைவான வாக்கு வேறுபாட்டில் இவர் வெற்றி பெற்றிருந்தாலும் கூட,     முதல்வர் மு.க.தாலினின் தோல்வியாகத், தி.முக. அரசின் தோல்வியாகப் பூதாகரமாகப் படம் பிடிக்கப்படும். ஆட்சியில் குறைகளில்லாமல் இல்லை. ஆனால், மக்கள் குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள் மிகைநாடி மிக்க கொளல்.(திருவள்ளுவர், திருக்குறள் 504) என ஆராய்ந்து மு.க.தாலின் தலைமையிலான் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் பேராயக்கட்சி வேட்பாளர்…

அனைத்துலகத் திருக்குறள் மாநாடு, ஈரோடு 2020

அனைத்துலகத் திருக்குறள் மாநாடு, ஈரோடு 2020 1330 திருக்குறளையும் மலையிலே கல்வெட்டில் பதித்துக் குறள் மலையை உருவாக்க, குறள் மலைச் சங்கமும்,   ஈரோடு வேளாளர் மகளிர் கல்லூரியும்  இணைந்து நடத்தும் மாபெரும் அனைத்துலகத் திருக்குறள் மாநாடு. மாநாடு நடைபெறும் நாள் : மார்கழி 20 & 21-தி.பி.2050; 3.1. 2020 & 4.1. 2020. மாநாடு நடைபெறும் இடம் : வேளாளர் மகளிர் கல்லூரி, திண்டல், ஈரோடு. மாநாடு முடிந்தவுடன் அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை குரல் மலையைப் பார்வையிட அனைவரும் அழைத்துச் செல்லப்படுவார்கள். மாநாட்டின்…

இளைஞர்களுக்குத் தந்தை பெரியார் வரலாறு 2. – நாரா.நாச்சியப்பன்

(இளைஞர்களுக்குத் தந்தை பெரியார் வரலாறு 1. – தொடர்ச்சி) இளைஞர்களுக்குத் தந்தை பெரியார் வரலாறு 2.   செல்லப் பாட்டி   வெங்கட்டருடைய சிற்றன்னை கணவனை இழந்தவர். அவருக்குப் பிள்ளை கிடையாது. ஆகவே, இராமசாமியைத் தன் வீட்டிற்கு அழைத்துச் சென்றுவளர்த்து வந்தார். சிறிய பாட்டியின் செல்லம் இராமசாமியை ஒரு முரடன் ஆக்கி விட்டது. பாட்டி வசதியில்லாதவர். ஆகவே, இராமசாமிக்குப் பழஞ்சோறும். சுண்டற்குழம்பும்தான் உணவாகக் கிடைக்கும். இராமசாமிக்கோ வடை, வேர்க்கடலை, பட்டாணி போன்ற தீனிகளில் ஆசை அதிகம். பாட்டியிடம் காசு கிடைக்காது. ஆகையால், ‘ஓசி‘ வாங்கியும்,…

இளைஞர்களுக்குத் தந்தை பெரியார் வரலாறு 1. – நாரா.நாச்சியப்பன்

இளைஞர்களுக்குத் தந்தை பெரியார் வரலாறு 1. முன்னுரை  என் கண்மணிகளே! அன்புக் குழந்தைகளே! இப்போது உங்களுக்கு ஒரு வரலாறு சொல்லப் போகிறேன். இது நம் பெரியாருடைய வரலாறு. உங்கள் பாடப் புத்தகத்தில் பெரிய பெரிய தலைவர்களைப்பற்றி நீங்கள் படித்திருப்பீர்கள். அவர்களுக்கும். நமது பெரியாருக்கும் மிகப் பெரிய வேறுபாடு உண்டு. தமிழ் மக்களின் தாழ்வுக்குக் காரணமாக இருந்தவை சாதிகளும், மதங்களுமே ஆகும். பல பெரியவர்கள் சாதி வேற்றுமை கூடாது என்றார்கள். மதவெறியைப் பல அறிஞர்கள் கண்டித்திருக்கிறார்கள். நமது பெரியார் இராமசாமியோ சாதிகளே கூடாது! என்றார். மதங்களை…

திருக்குறள் கல்வெட்டு குறித்த கலந்தாய்வு, சென்னை

கார்த்திகை 24, 2048 / 10.12.2017 காலை 10.00 முதல் மாலை  5.00 மணி வரை திருவள்ளுவர் வாழ்வியல் மன்றம் நீலாங்கரை, சென்னை 600 115 திருக்குறள் கல்வெட்டு குறித்த கலந்தாய்வு   [பதிப்பிடம்: மலையப்பாளைய மலை,  ஈரோடு] குறள்மலைச்சங்கம், வளசரவாக்கம், சென்னை 600 087

மறைமலையடிகள் 4/5 – கி.ஆ.பெ.

(மறைமலையடிகள் 3/5 – கி.ஆ.பெ . : தொடர்ச்சி) மறைமலையடிகள் 4/5   45 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை இராயப்பேட்டை பாலசுப்பிரமணிய பக்த சன சபையில் மறைமலையடிகளார் பேசுகின்றபொழுது “கடவுள் நம்பிக்கை வர வரக் குறைந்து வருகிறது. கடவுள் இல்லை என்பவரும் உயிரோடுதான் இருந்து கொண்டிருக்கிறார்கள். நீங்களும் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்” என்று கூறினார். இதைக் கேட்டுக் கொண்டிருந்த சிதம்பரம் என். தண்டபாணி(ப் பிள்ளை)யும், ச.ச.(J.S.) கண்ணப்பரும் “பெரியாரைக் கொலை செய்யச் சொல்லி மறைமலையடிகள் மக்களைத் தூண்டுகிறார்” என நீதிமன்றத்தில் ஒரு வழக்கைப் போட்டுவிட்டார்கள்.  நான் அதுசமயம்…

புலம்பெயர்ந்தோர் எழுத்துலக ஆய்வு மாநாடு, ஈரோடு

கார்த்திகை 20 & 21 . 2048  / புதன் & வியாழன் 6 & 7 .12.2017 ஈரோடு கலை அறிவியல் கல்லூரி,   புலம்பெயர்ந்தோர் எழுத்துலக ஆய்வு மாநாடு, ஈரோடு   மாநாட்டின் ஒரு பகுதியாகச் சீவகுமாரனின் 10 நூல்கள் பற்றிய ஆய்வுக்கட்டுரைகள் அளிக்கப்பெற்று அவற்றின் அதன் மீது கலந்துரையாடலும் நிகழும். ஈரோடு கலை- அறிவியல் கல்லூரியினர் தங்குமிட வசதியையும் செய்து தருகின்றார்கள். கலந்து கொள்ள முடிந்தவர்கள் கலந்து கொள்ளவும், பார்வையாளர்கள் ஆகவும் – பங்களிப்புச் செய்பவர்களாகவும். அன்புடன் வி. சீவகுமாரன்,…

இரு நாள் பெரியாரியல் பயிலரங்கம் – பவானி

சித்திரை 04, 2047 / 17.04.2016 ஞாயிறு & சித்திரை 05, 2047 / 18.04.2016, திங்கள் காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை இடம்: தோப்பு துரைசாமி தோட்டம், காலிங்கராயன் அணைக்கட்டு , பவானி [இராயல்திரையரங்கம்  இரண்டாவது வீதி, கந்தன்  நெசவு(டெக்சு ) சாலை] திராவிடர் விடுதலைக் கழகம்