தலைப்பு-வாளெடுக்கத்தயக்கமேன்?-வாணிதாசன்  : thalaippu_vaaledukkathayakkamean_vanidasan

தமிழ்மறை போற்று கின்றீர்:

சங்கநூல் விளக்கு கின்றீர்;

தமிழ்மொழி எங்கள் ஈசன்

தந்ததொன் மொழியென் கின்றீர்;

தமிழ்மொழி தொலைக்க வந்த

இந்தியை வெட்டிச் சாய்க்கத்

தமிழ்ப்புல வீர்காள்! ஏனோ

தயங்குகிறீர்! மனமே இல்லை!

தமிழரே திராவி டத்தில்

தனியர சாண்டி ருக்கத்

தமிழர்கள் வடவ ருக்குத்

தலைசாய்த்து வாழ்வதற்குத்

தமிழரில் ஒருசி லர்கள்

சரிசரி போடக் கண்டும்

தமிழ்க்கொடு வாளெ டுக்கத்

தயக்கமேன்? மனமே இல்லை!

வாணிதாசன்