சமற்கிருத ஆதிக்கவாதிகளான என். கோபாலசாமியும், இரா. நாகசாமியும்

தமிழ்ச் செம்மொழி விருதுக்குழுப் பொறுப்பாளர்களா?

செம்மொழி ஆய்வு மையம் தமிழை வளர்க்கவா? தகர்க்கவா?

புல்லுருவிகளைப் பொறுப்பிலிருந்து நீக்கு!

சென்னையில் நாளை பங்குனி 20, 2050 /03.04.2019) காலை 10.00மணிக்குக் கண்டன ஆர்ப்பாட்டம்!


செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் சார்பில் ஒவ்வோர் ஆண்டும் அளிக்கப்படும் தமிழ்ச் செம்மொழி விருதுகளுக்கான தேர்வுக் குழுவில், தமிழ் மொழிக்கு எதிரான புல்லுருவிகளை இந்திய அரசு அமர்த்தியுள்ளது.

தமிழ்நாட்டின் முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையரும், திருப்பதியிலுள்ள இராட்ரீய சமற்கிருத வித்தியா பீடப் பல்கலைக் கழகத் துணைவேந்தருமான திரு. என். கோபாலசாமி தலைமையில் அமைக்கப்பட்டுள்ள அக்குழுவில், திருக்குறளைக் கொச்சைப்படுத்தி நூல் எழுதியதற்காக இந்திய பா.ச.க. அரசால் விருது அளிக்கப்பட்டு பாராட்டப்பட்ட திரு. இரா. நாகசாமி உறுப்பினராக அமர்த்தப்பட்டுள்ளார்.

தமிழுக்குத் தொண்டாற்றிய அறிஞர் பெருமக்களுக்கு விருது வழங்க, தமிழ் மொழிக்கு எதிரான கருத்தாளர்களைக் கொண்ட குழு அமைக்கப்பட்டிருப்பது, இவ்விருது வழங்கும் நோக்கத்தையே சிதைப்பதாகும்!

எனவே, செம்மொழி விருதுக்குழுவிலிருந்து என். கோபாலசாமி – இரா. நாகசாமி ஆகியோரை உடனே நீக்க வேண்டும்! தகுதியுள்ள தமிழஞர்களை அக்குழுவில் அமர்த்த வேண்டும் என வலியுறுத்தி, நாளை பங்குனி 20, 2050 /03.04.2019) காலை 10 மணிக்கு, அடையாறு மத்திய கைலாசு அருகிலிருந்து பேரணியாகப் புறப்பட்டு – செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தின் முன்பு – தமிழுரிமைக் கூட்டமைப்பு சார்பில் தமிழறிஞர்களும் பல்வேறு தமிழ்த்தேசிய அமைப்புகளும் பங்கேற்கும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகின்றது.

தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் கி. வேங்கடராமன் தலைமையில் தமிழ்த்தேசியப் பேரியக்கம் இவ்வார்ப்பாட்டத்தில் பங்கேற்கிறது!

தமிழின உணர்வாளர்களும், தமிழ் மக்களும் இவ்வார்ப்பாட்டத்தில் திரளாகப் பங்கேற்க வேண்டுமென அன்புரிமையுடன் அழைக்கிறது!

தொடர்புக்கு – 9840167599, 9025162216

தலைமைச் செயலகம்,

தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9443918095

முகநூல் : www.fb.com/tamizhdesiyam 

ஊடகம் : www.kannottam.com

இணையம் : www.tamizhdesiyam.com

சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam

காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam