திருக்குறள் மனுதருமத்தின் சாராமா?- நாகசாமி நூலுக்கு எதிருரை
ஐப்பசி 21, 2049 / புதன்கிழமை /
07.11.2018 மாலை 6.30 – இரவு 8.30
நடிகவேள் எம்.ஆர். இராதா மன்றம்
பெரியார் திடல், சென்னை 600 007
திருக்குறள் மனுதருமத்தின் சாராமா?-
நாகசாமி நூலுக்கு எதிருரை
சிறப்புப்பொதுக்கூட்டம்
தலைமை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
வரவேற்பு: கவிஞர் கலி.பூங்குன்றன்
கருத்துரை:
முனைவர் மறைமலை இலக்குவனார்
எழுத்தாளர் பழ.கருப்பையா
பேரா.சுப.வீரபாண்டியன்
திராவிடர் கழகம்
திருக்குறள் ஆன்மிக உளவியல் நூல். அழுக்காறு,அவா,வெகுளி இன்னாச்சொல்/செயல் ஆகியன அறவே ஒழிந்தும் அன்பு,நாணம்,ஒப்புரவு, கண்ணோட்டம் மற்றும் வாய்மை முழுமையாக நிறந்தும் இருக்கும் நிலையில் ஆன்மா பிறப்பில்லாப் பெருநிலையை அடைந்து புத்தேளிர் உலகு வாசியாகும்.இதில் கடவுளின் பங்கு ஒன்றும் கிடையாது. கடவுள் கொடுப்பதும் இல்லை கொள்வதும் இல்லை, தடுப்பதும் இல்லை தண்டிப்பதும் இல்லை.நூற்றுக்கணக்கான குறட்பாக்கள் முற்றிலும் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டு உள்ளன.முழுக்க முழுக்கத் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டு உள்ள அதிகாரங்களும் உள்ளன. நாகசாமி குறட்பாக்களின் அடிப்படையில் எதுவும் எழுதவில்லை.அவருடைய நூல் பிதட்டலின் தொகுப்பு. அது கூட ஒழுங்கு முறையாக இல்லை.உடனடியாக அவரது நூலத்தடை செய்வதுடன் அவருக்குத் தரப்பட்டிருக்கும் பத்மபூஷண் பட்டத்தையும் திரும்பப் பெறவேண்டும்.