பெரியார் பேருந்து நிலையம்: கோபுரம் இந்து மத அடையாளம் அல்ல! இலக்குவனார் திருவள்ளுவன்

பெரியார் பேருந்து நிலையம்: கோபுரம் இந்து மத அடையாளம் அல்ல! மதுரை மாநகரில் உள்ள பெரியார் பேருந்து நிலையத்தை மேம்படுத்திச் சிறப்பாக  மாற்றி அமைக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. புதிய கட்டுமானத்திற்கான வரைபடம் 20.1.2019 அன்று  வெளி யிடப்பட்டது. மீனாட்சியம்மன் கோவில் கோபுர வடிவத்தில் வரைபடம் வெளி வந்ததால் கடும் எதிர்ப்பு வந்ததாகவும் அவ்வாறு இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.  ஆனால், அண்மையில் மதுரையில் உள்ளாட்சித் துறை அமைச்சர்  வேலுமணி, கோபுரம் வடிவிலான  வரைபட அடிப்படையிலேயே மதுரை பெரியார் பேருந்து நிலைய முகப்பு அமையும்…

திருக்குறள் மனுதருமத்தின் சாராமா?- நாகசாமி நூலுக்கு எதிருரை

ஐப்பசி 21, 2049 / புதன்கிழமை / 07.11.2018  மாலை 6.30 – இரவு 8.30 நடிகவேள் எம்.ஆர். இராதா மன்றம் பெரியார் திடல், சென்னை 600 007 திருக்குறள் மனுதருமத்தின் சாராமா?- நாகசாமி நூலுக்கு எதிருரை சிறப்புப்பொதுக்கூட்டம் தலைமை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி வரவேற்பு:  கவிஞர் கலி.பூங்குன்றன் கருத்துரை: முனைவர் மறைமலை இலக்குவனார் எழுத்தாளர் பழ.கருப்பையா பேரா.சுப.வீரபாண்டியன் திராவிடர் கழகம்

பெரியார் பன்னாட்டு அமைப்பு, அமெரிக்கா – பல்வழி அமைப்புப் பொழிவு

பெரியார் பன்னாட்டு அமைப்பு, அமெரிக்கா பல்வழி அமைப்புப் பொழிவு வரும் தை 27,  பிப். 9 வெள்ளி இரவு 9 மணிக்கு ; தலைப்பு : புராணங்களும் பொய்மையும் மானமிகு சு. அறிவுக்கரசு, செயலவைத் தலைவர், திராவிடர் கழகம். வருவாய்த்துறை அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றவர். சிறந்த பேச்சாளர்,எழுத்தாளர். மாநிலப் பகுத்தறிவாளர் கழகத் தலைவராக இருந்தவர். http://www.modernrationalist.com/2011/april/page05.html அழைப்பெண் : அமெரிக்கா  &  கனடா  5157391519  குறிஎண் 890386 இந்தியா 1725199068 பிப்.10, காலை 7.30 சிங்கப்பூர் 65 31389208 ஐக்கிய இங்கிலாந்து  44 3309981254

ஆரியச் சூழ்ச்சியும் தந்தை பெரியார் காட்டும் வழியும் 2/9 : பெங்களூரு முத்துச்செல்வன்

(ஆரியச் சூழ்ச்சியும் தந்தை பெரியார் காட்டும் வழியும் 1/9 தொடர்ச்சி) ஆரியச் சூழ்ச்சியும் தந்தை பெரியார் காட்டும் வழியும் 2/9   தந்தை பெரியார் குறிப்பிட்டுள்ள ‘பிராமணீய நாயக’த்தின் பயன்கள் தேவைப்படாத பெரியாரியலார், இந்துத்துவத்தை நிலைநாட்டத் துடிக்கும்  பிராமணச் சூழ்ச்சிகளை உடனுக்குடன் தயக்கமும் மயக்கமும் இன்றித் தோலுரித்துக் காட்ட முற்படுகின்றனர். இன்றைக்கும் திராவிடர் கழகத்தின் தேவையை உணர்த்துவதாக அவ்வரிகள் அமைந்துள்ளன.   இந்துத் தேசியத்தின் ஒரு கூறாகிய சமற்கிருதத் திணிப்புக் குறித்துத் தந்தை பெரியாரின் கருத்துகளைப் பார்ப்போம்.   “இந்த நாட்டில் பலகாலமாகச் ‘சமற்கிருதம்’…

அனைத்துச் சாதியினருக்கும் அருச்சகர் உரிமைகோரித் திராவிடர் கழகம் மறியல் போராட்டம்

அனைத்துச் சாதியினருக்கும் அருச்சகர் உரிமைகோரித் திராவிடர் கழகம் மறியல் போராட்டம்   சென்னையில்  சித்திரை 05, 2047 / ஏப்பிரல் 18.4.2016  காலை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை ஆணையர், அலுவலகம் முன்பு திராவிடர் கழகத்தின் சார்பில் அனைத்துச் சாதியினருக்கும் அருச்சகர் உரிமை கோரி நடைபெற்ற மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, பேராசிரியர் சுப.வீரபாண்டியன், இரா.அதியமான், கவிஞர் வா.மு.சேதுராமன்  முதலான பலர் கைதாயினர்.

இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 14: ம. இராமச்சந்திரன்

(இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 13: தொடர்ச்சி) 14   நெல்லை நகரத்தில் சிறந்து விளங்கிய ம.தி.தா. இந்துக் கல்லூரியை விட்டு நீங்கி, விருதுநகர் செந்தில்குமார நாடார் கல்லூரிக்கு வந்ததுதான் பெருங்குற்றம் என்று தன்னைத்தானே நொந்து கொள்கிறார் இலக்குவனார். ‘               நெல்லைக்குரிய நீள்கல் லூரியில்                 பணிவிட் டிங்குப்படர்ந்ததே குற்றம்’ 16   நெல்லைக் கல்லூரியில் தலைமைப் பேராசிரியராய்ப் பதவிபெற வாய்ப்பில்லை என்பதைத் தவிர, வேறுகுறை எதுவும் இல்லை. ஆயினும் உண்மைத் தொண்டு ஆற்றுவதற்கு உரிய இடம் நெல்லையே. தமிழ்ப் புலவர்க்குத் தனிப்…

‘ தமிழ் இன உரிமை மீட்பு’ பொதுக்கூட்டம் – மயிலாடுதுறை

  நாகை மாவட்டம், மயிலாடுதுறையில், திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில், ‘ காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், காவிரி பாசன படுகையில் மீத்தேன் எடுக்கும் திட்டத்தை கைவிடக்கோரியும் ‘ தமிழ் இன உரிமை மீட்பு’ பொதுக்கூட்டம். நாள்: ஆடி 8, 2045 – 24.07.2014 வியாழன் மாலை 5 மணி இடம்: விசயா திரையரங்கு அருகில், மயிலாடுதுறை.   கருத்துரை: தோழர் கொளத்தூர் மணி அவர்கள், தலைவர், திராவிடர் விடுதலைக் கழகம். தோழர் விடுதலை இராசேந்திரன் அவர்கள், பொதுச்செயலாளர், திராவிடர் விடுதலைக் கழகம்.