‘பாரிவேந்தர் மாணவர் தமிழ்மன்றம்’ தொடக்கவிழா – நூல் வெளியீடு
அன்புடையீர்
வணக்கம்.
திஇநி-SRM பல்கலைக்கழகத் தமிழ்ப்பேராயத்தின்கீழ் மாணவர்களின் தமிழ்த் திறன்களையும் தமிழ் சார்ந்த கலைத் திறன்களையும் ஊக்குவிப்பதற்காகவும் அவற்றை அரங்கேற்றுவதற்குரிய மேடை அமைத்துத்தரவேண்டும் என்பதற்காகவும் ‘பாரிவேந்தர் மாணவர் தமிழ்மன்றம்’ என்ற ஒரு அமைப்பு தொடங்கப்படவுள்ளது.
இதன் தொடக்கவிழா ஆவணி 17, 2046 / 03.09.2015 வியாழக்கிழமையன்று பிற்பகல் 2 மணி முதல் 4 மணி வரை காட்டாங்குளத்தூர் வளாகத்தில் அமைந்துள்ள முனைவர் தி.பொ. கணேசன் அரங்கத்தில் நடைபெறவுள்ளது.
இவ்விழாவில் விகடன் பதிப்பகத்தின் வாயிலாக வெளிவந்துள்ள கணினித்தமிழ் – Tamil Computing என்ற எனது நூலும் மாண்பமை பாரிவேந்தர் அவர்களால் வெளியிடப்பட உள்ளது.
நலாயிரம் தமிழார்வலர்கள் இந்த விழாவில் கலந்துகொள்ள உள்ளனர்.
அனைவரும் வருக.
நன்றி.
அன்புடன் இல.சுந்தரம்,
ஒருங்கிணைப்பாளர்
Leave a Reply