‘பாரிவேந்தர் மாணவர் தமிழ்மன்றம்’ தொடக்கவிழா – நூல் வெளியீடு

அன்புடையீர் வணக்கம். திஇநி-SRM பல்கலைக்கழகத் தமிழ்ப்பேராயத்தின்கீழ் மாணவர்களின் தமிழ்த் திறன்களையும் தமிழ் சார்ந்த கலைத் திறன்களையும் ஊக்குவிப்பதற்காகவும் அவற்றை அரங்கேற்றுவதற்குரிய மேடை அமைத்துத்தரவேண்டும் என்பதற்காகவும்  ‘பாரிவேந்தர் மாணவர் தமிழ்மன்றம்’ என்ற ஒரு அமைப்பு தொடங்கப்படவுள்ளது. இதன் தொடக்கவிழா ஆவணி 17, 2046 / 03.09.2015 வியாழக்கிழமையன்று  பிற்பகல் 2 மணி முதல் 4 மணி வரை காட்டாங்குளத்தூர் வளாகத்தில் அமைந்துள்ள முனைவர் தி.பொ. கணேசன் அரங்கத்தில் நடைபெறவுள்ளது. இவ்விழாவில் விகடன் பதிப்பகத்தின் வாயிலாக வெளிவந்துள்ள கணினித்தமிழ் – Tamil Computing என்ற எனது நூலும்…

”மருத்துவ அகராதி” தமிழ் – தமிழ் – ஆங்கிலம் தொகுதி – 1: அறிமுகம்

அறிவுத்தேடல் நூல் “மருத்துவ அகராதி” தமிழ் – தமிழ் – ஆங்கிலம்: தொகுதி – 1 நூலாசிரியர் : அறிஞர் த. வி. சாம்பசிவம்   அறிஞர் த. வி. சாம்பசிவம் அவர்களால் 75 ஆண்டுகளுக்கு முன் (1938) எழுதப்பெற்ற 1040 பக்கங்களைக் கொண்ட நூல் இது. தமிழுக்கு ஆக்கம் தரும் நன்முயற்சிகளில் இதுவும் ஒன்று. வாய்ப்புள்ளோர் வாங்கிப்படித்து, தங்கள் நூலகத்தில் பாதுகாக்க வேண்டிய நூல். வெளியீடு: தமிழ்ப்பேராயம் திரு இராமசாமி நினைவுப் பல்கலைக்கழகம் (எசு.ஆர்.எம்) எ சு. ஆர். எம் நகர் காட்டாங்குளத்தூர்…

கணிணித்தமிழ் அடிப்படையும் பயன்பாடும் – சான்றிதழ்ப் படிப்பு

தமிழன்பருக்கு, வணக்கம். கணிணித்தமிழ் அடிப்படையும் பயன்பாடும் –  சான்றிதழ்ப் படிப்பு Certificate Course in  Fundamentals & Use of Tamil Computing சித்திரை 21 – வைகாசி 15, 2046 / 04.05.15 – 29.05.15  எனும் ஒருமாதகாலச் சான்றிதழ்ப் பயிற்சி வகுப்பு மே மாதம் தி.இ.நி./ SRM பல்கலைக்கழகத் தமிழ்ப்பேராயக் கணிணித்தமிழ்க் கல்வித்துறையில் நடைபெறவுள்ளது.  கணிணியின் அடிப்படையையும் செயல்பாட்டையும் தெரிந்துகொண்டு  அனைவரும் கணிணியில் தமிழைப் பயன்படுத்துவதற்கும் ஆய்வு செய்வதற்கும் தமிழ்மென்பொருள் உருவாக்குவதற்கான அடிப்படை ஆய்வுப் பணிகளை அறிந்து கொள்வதற்கும் இணையத்தமிழ்ப் பயன்பாட்டினைப் புரிந்துகொள்வதற்கும் பயிற்சியிக்கப்படுகிறது.   இந்தப் பயிற்சியின் வாயிலாக ஊடகத்துறையில் பணிவாய்ப்புகள் பெறமுடியும்….

தமிழ்ப்பேராய விருதுகள் வழங்கும் விழா

அன்புடையீர், வணக்கம். தி.இரா.நி.பல்கலைக்கழகத் தமிழ்ப்பேராய விருதுகள் வழங்கும் விழா ஆவணி 9. 2045 /ஆக.25-ஆம் நாள், திங்கள் கிழமை காலை 10 மணியளவில் சென்னை, காட்டாங்குளத்தூர் வளாகத்தில் உள்ள முனைவர் தி.பொ. கணேசன் அரங்கத்தில் நடைபெற உள்ளது. தமிழ்ப் படைப்பாளிகளையும், தமிழறிஞர்களையும் விருதளித்துச் சிறப்பிக்கும்  இவ் விழாவில் கலந்துகொண்டு, சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கிறோம். நன்றி.. முனைவர் இல. சுந்தரம் : +91-98423 74750