மகளிர் கூட்டம் – மதுவை ஒழிக்கும் மாநாட்டில் பங்கேற்பீர்!
மதுவை ஒழிக்கும் மாநாட்டில் பங்கேற்பீர்
மகளிர் கூட்டம்- மாசி 02, 2017/14.2.2016
கோ.க.மணி வேண்டுகோள்!
ஆய்வுக் கருத்து தமிழ்நாட்டின் மொத்தக் கைம்பெண்கள் 22 , 33,000பேர்.
இதில் 90% மது குடிகாரர் இறந்ததால் விதவை.
தமிழ்நாட்டில் சாராயம், பீர், பிராந்தி போன்ற மதுவின் கொடுமை சொல்லி மாளாது.
மதுவினால் 60 வகையான நோய்கள் வருகின்றன.
மது உடல் நலத்தைக் கெடுக்கும்.
உயிரைப் பறிக்கும்.
குடும்பத்தை வீணாக்கும் .
குடும்பப் பொருளாதாரதைப் பாழாக்கும்.
மது நாட்டுக்கு கேடு, வீட்டுக்கு கேடு, உயிருக்கு கேடு.
மருத்துவர் அன்புமணி – முதலமைச்சர் வேட்பாளர் :முதல் நாள் முதல் கையெழுத்து ‘பூரண மதுவிலக்கு’ என்று ஒரு சொட்டு மது இல்லாத் தமிழகம் காண்போம் என்று அறிவித்துள்ளார்.
மது ஒழிக்கப்பட வேண்டுமென 35 ஆண்டுகள் மருத்துவர் இராமதாசு போராடி வருகின்றார்.
நானும் மது ஒழிக்க வேண்டிச் சட்டமன்றத்தில் தொடர்ந்து வாதாடி வந்தேன்.
“மக்களைக் காக்க மதுவை ஒழியுங்கள்! உங்கள் பாதம் பிடித்துக் கேட்டுக்கொள்கிறேன்” என்றும் சட்டமன்றத்தில் வற்புறுத்திப் பார்த்தேன். நடக்கவில்லை.
உலக நல்வாழ்வு நிறுவன ஆய்வு சொல்கிறது:-
தமிழ்நாட்டில் ஆண்டுக்கு இரண்டு இலட்சம் பேர் மது, குடியினால் இறக்கிறார்கள். ஆக ஆண்டுக்கு இரண்டு இலட்சம் விதவைகள் உருவாகிறார்கள்.
தற்போதைய ஆய்வு தெரிவித்துள்ளது: –
தமிழ்நாட்டில் மொத்தம் 22,33,000(இருபத்திரண்டு இலட்சத்து முப்பத்து மூவாயிரம்) விதவைகள் உள்ளனர்.
இதில் 90% பேர் குடிகாரக்கணவர் இறந்ததால் விதவைகள்.
இது எவ்வளவு பெரிய வேதனை!
மதுவின் கொடுமைகள் இன்னும் ஏராளம் இருக்கின்றன.
இவ்வளவுக் கொடுமைகளுக்குப் பின் சாராயக்கடைகள்( டாசுமாக் கடைகள்) வேண்டுமா?
சாராயத்தை ஒழிக்க வேண்டாமா?
யார் ஒழிப்பது?
இதோ அன்புமணி ஆட்சியில் பூரண மதுவிலக்கு!
சக்தி மிக்கவர்கள் பெண்கள்!
ஆக்கும் சக்தி பெண்கள்!
காக்கும் சக்தி பெண்கள்!
அழிக்கும் சக்தி பெண்கள்!
மதுவை ஒழிக்கும் மாநாட்டிற்குப் புறப்படுங்கள்
புறமுதுகை முதியவளும் போற்றாத நாடு
புதல்வனைத்தாய் மகிழ்வுடனே போர்க்கனுப்பும் நாடு
புறநானூற்றுப் பெண்களாய்ப் புறப்படுங்கள்.
சீறி வந்த புலியை முறத்தால் விரட்டியடித்த வீரப்பெண்ணினமே புறப்படுங்கள்.
இளம் வீராங்கணைகளே வீறுகொண்டு வாரீர்!
மதுவை ஒழிக்க மாநாடு காண வாரீர்! வாரீர்!
குடும்பம் குடும்பமாய் வாரீர்!
எழுச்சி மிக்க இளைஞர்களே!
இளம் சிங்கங்களே!
மகளிரையும் மாநாட்டுக்கு அழைத்து வாருங்கள்!
பொறுப்பாளர்களே, மகளிரையும் அழைத்து வாருங்கள்.
Leave a Reply