தமிழில் தேர்வு நடத்த முடியாவிட்டால் தேர்வாணையத்தை இழுத்துமூடுங்கள்! – மரு.இராமதாசு

 தமிழில் தேர்வு நடத்த முடியாவிட்டால் தேர்வாணையத்தை இழுத்துமூடுங்கள் – மரு.இராமதாசு தமிழ்நாடு அரசுத் துறைகளில் உள்ள இரண்டாம் தொகுதி பணிகளுக்கான போட்டித் தேர்வுகளில் சிலவற்றை நடப்பாண்டில்  தமிழில் நடத்த முடியாது என்று த.ந.அ.ப.தேர்வாைணயம் அறிவித்துள்ளது. இரண்டாம் தொகுதித் தேர்வுகள் அடுத்தவாரம் இதே நாளில் தொடங்கவிருக்கும்  நிலையில்,  இந்த அறிவிப்பு பெரும்  அதிர்ச்சியளிக்கிறது. இரண்டாம் தொகுதித் தேர்வு எழுதும் 6.26 இலட்சம் பேரில் 4.80 இலட்சம் பேர் பொது அறிவு மற்றும் தமிழையும், 1.45 இலட்சம் பேர் பொது அறிவு மற்றும் ஆங்கிலத்தையும் விருப்பப்பாடமாகத் தேர்ந்தெடுத்துள்ளனர்….

தேர்தல் ஆணையம் வெட்கித் தலைகுனிய வேண்டும்! – மரு.இராமதாசு

தேர்தல் ஆணையம் வெட்கித் தலைகுனிய வேண்டும்!  – மரு.இராமதாசு   இடைத்தேர்தலில் திமுகவும் அதிமுகவும் பழைய வேட்பாளர்களை மீண்டும் நிறுத்தத் தேர்தல் ஆணையம் ஒப்புக்கொண்டதற்கு வெட்கி தலைகுனிய வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் மரு.இராமதாசு தெரிவித்துள்ளார்.   இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் வரும் நவம்பர் 19 அன்று தஞ்சாவூர், அரவக்குறிச்சி ஆகிய தொகுதிகளுக்குத் தேர்தல் நடைபெறுவதாகத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளதைச் சுட்டிக்காட்டியுள்ளார்.   2016 சட்டமன்றத் தேர்தலின்போது தஞ்சாவூர், அரவக்குறிச்சி தொகுதிகளில் பணம் ஆறாக ஓடியதாகவும், இதனால் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டதாகவும் அவர்…

தமிழில் வாதாடியதால் வழக்கைத் தள்ளுபடி செய்வதா? – இராமதாசு கண்டனம்

தமிழில் வாதாடியதால் வழக்கைத் தள்ளுபடி செய்வதா? – இராமதாசு கண்டனம்  உயர்நீதி மன்றத்தின் மதுரைக் கிளையில் தமிழில் வாதாடியதால் வழக்கைத் தள்ளுபடி செய்வதா? என்று  மரு.இராமதாசு அறிக்கை வழி வினா எழுப்பிக் கண்டித்ததுள்ளார். பா.ம.க நிறுவனர்  மரு.இராமதாசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-   மக்கள் நலனுக்காக எத்தனையோ சிறப்பான தீர்ப்புகளை வழங்கிய சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை  விந்தையான தீர்ப்பை அளித்திருக்கிறது. பொதுநலன் சார்ந்த வழக்கில் வழக்கறிஞர் இல்லாமல் வாதிட்ட  முறையீட்டாளர் தமது தரப்பு வாதுரையைத் தமிழில் கூறியதை ஏற்க முடியாது எனக்…

மக்கள் மனத்தில் மதில்மேல் பூனையாகப் பாராட்டுக்குரிய பா.ம.க. – இலக்குவனார் திருவள்ளுவன்

மக்கள் மனத்தில் மதில்மேல் பூனையாகப் பாராட்டுக்குரிய பாமக     “வன்னியர் வாக்கு அன்னியர்க்கில்லை” என்பதையே உரமாகக் கொண்டு உருவானதுதான் பாமக. சாதிவெறிப் பேச்சுகளை உரமாக இட்டுவளர்ந்ததுதான் பாமக. என்றாலும் அரசியலில் நிலைப்பதற்கு இவை உதவா என்பதை உணர்ந்தபொழுது சாதிக்கண்ணோட்டத்தை மாற்றிக் கொண்டதும் பாமகதான். தொல்தமிழர்கள், அருந்ததியினர், பழங்குடியினர் வகுப்புகளைச் சார்ந்தவர்களுக்குக் கட்சியில் பொறுப்புகள், அமைச்சர் பொறுப்புகள் வழங்கியதும் பிற இனத்தலைவர்களின் திருவுருவங்கள், மணிமண்டபம் போன்றவற்றை அமைத்ததும் திறந்து  வைத்ததும் பாமகதான். மாறியது பாமக, மாற்றியது மரு.இராமதாசு!   புகைபிடித்தலைக் கட்டுக்குக் கொண்டுவர முயற்சிகள்…

மதுவிலக்கு நாடகங்கள் மக்களை மயக்கா!

மதுவிலக்கு நாடகங்கள் மக்களை மயக்கா!     துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும்     நஞ்சுண்பார் கள்ளுண் பவர். (திருக்குறள் 926)  என்று மது அருந்துநருக்கும் நஞ்சு அருந்துநருக்கும் வேறுபாடில்லை என்கிறார் தெய்வப்புலவர் திருவள்ளுவர்.   அரசே குடிமக்களைக் குடிகார மக்களாக்கி நாளும் நஞ்சுஊட்டுவது கொடுமையினும் கொடுமையன்றோ! இக்கொடுமையை ஒழிக்க மன்பதை ஆர்வலர்களும் மக்களும் சில கட்சிகளும் பல அமைப்பினரும் போராடி வருகின்றனர். ஆனால், மது ஒழிப்புப் போராளிகளை மடியச் செய்யும் அரசு நாடகமாடுகிறது.   மதுவிலக்கு என்ற சிந்தனை இந்தியத் துணைக்கண்டத்தில் முதன்முதலில் தமிழ்நாட்டிற்குத்தான்…

பா.ம.க. மாநில மாநாடு 27- ஆம் நாளுக்கு ஒத்திவைப்பு: இராமதாசு

வண்டலூரில் நாளை நடைபெற இருந்த பா.ம.க. மாநில மாநாடு 27- ஆம் நாளுக்கு ஒத்திவைப்பு: இராமதாசு அறிவிப்பு பா.ம.க. நிறுவனர் மரு.இராமதாசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-     தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றத்திற்கான பா.ம.க. மாநில மாநாடு 14-ஆம் நாள் சென்னையை அடுத்த வண்டலூரில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில், இம்மாநாட்டை எப்படியாவது தடுத்துவிடவேண்டும் என்ற நோக்கத்துடன் மாநாட்டுக்கு உயர்நீதுிமன்றம் அளித்த இசைவை எதிர்த்து உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வில் அ.தி.மு.க. அரசு மேல்முறையீடு செய்தது….

மகளிர் கூட்டம் – மதுவை ஒழிக்கும் மாநாட்டில் பங்கேற்பீர்!

மதுவை ஒழிக்கும் மாநாட்டில் பங்கேற்பீர் மகளிர் கூட்டம்- மாசி 02, 2017/14.2.2016 கோ.க.மணி வேண்டுகோள்! ஆய்வுக் கருத்து தமிழ்நாட்டின் மொத்தக் கைம்பெண்கள் 22 , 33,000பேர். இதில் 90% மது குடிகாரர் இறந்ததால் விதவை. தமிழ்நாட்டில் சாராயம், பீர், பிராந்தி போன்ற மதுவின் கொடுமை சொல்லி மாளாது. மதுவினால் 60 வகையான நோய்கள் வருகின்றன. மது உடல் நலத்தைக் கெடுக்கும். உயிரைப் பறிக்கும். குடும்பத்தை வீணாக்கும் . குடும்பப் பொருளாதாரதைப் பாழாக்கும். மது நாட்டுக்கு கேடு, வீட்டுக்கு கேடு, உயிருக்கு கேடு. மருத்துவர்  அன்புமணி…

திருடன் கையில் திறவுகோல் – இராமதாசு

ஐ.நா தீர்மானம் திருடன் கையில் திறவுகோலை ஒப்படைப்பதற்கு இணையானது:  மரு.இராமதாசு   “இலங்கை மீதான போர்க் குற்றச்சாட்டுகள் குறித்து அந்நாட்டு நீதிமன்றத்தின் மூலமாகவே உசாவல் நடத்த வகை செய்யும் அமெரிக்கத் தீர்மானம் ஐ.நா மனித உரிமைப் பேரவையில் இந்தியா முதலான நாடுகளின் ஒத்துழைப்புடன் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டிருக்கிறது. போர்க்குற்றங்களையும், இனப் படுகொலையையும் நடத்திய கொடுமதியானவர்கள் தண்டனையின்றித் தப்பிக்கவும், சொந்தங்களைப் பறி கொடுத்தவர்கள் இறுதி வரை நீதி கிடைக்காமல் வாடவும்தான் இந்தத் தீர்மானம் வகை செய்யும்.   இலங்கையில் ௨௦௦௯ (2009) ஆம் ஆண்டு நடந்த இறுதிப்…

பிரபாகரன் சிலை அகற்றம்: மரு.இராமதாசு கண்டனம்! மாணவர்கள் கூட்டமைப்பு எச்சரிக்கை!

தமிழ்த்தேசிய ஞாலத்தலைவர் பிரபாகரன் சிலை நல்லூரில் அகற்றம்: மரு.இராமதாசு கண்டனம்! போராட்டம் வெடிக்கும் எனத் தமிழீழ விடுதலைக்கான மாணவர்கள் கூட்டமைப்பு  எச்சரிக்கை!   பா.ம.க. நிறுவனர் மரு.இராமதாசு இதன் தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் பின்வருமாறு கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்:–  நாகை மாவட்டம் வேளாங்கண்ணியை அடுத்த தெற்குப் பொய்கை நல்லூரிலுள்ள கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த ஈழப்போராளி பிரபாகரனின் உருவச்சிலையை காவல் துறையினர் இரவோடு இரவாக அகற்றியிருக்கின்றனர்.  அந்த ஊரில் மின்சாரத்தைத் துண்டித்துவிட்டு பிரபாகரன் சிலையை மட்டும் அகற்றியுள்ளனர். குதிரை சிலை மட்டும் இருக்கும் நிலையில், பிரபாகரன் சிலை…